Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி? டிஃபன், சாதம் என இரண்டிலும் சேர்த்து சாப்பிடலாம்; இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி? டிஃபன், சாதம் என இரண்டிலும் சேர்த்து சாப்பிடலாம்; இதோ ரெசிபி!

Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி? டிஃபன், சாதம் என இரண்டிலும் சேர்த்து சாப்பிடலாம்; இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Feb 01, 2025 12:14 PM IST

Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காயில் மசியல் செய்வது எப்படி என்று பாருங்கள். அதை நீங்கள் டிஃபன் மற்றும் சாதம் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி? டிஃபன், சாதம் என இரண்டிலும் சேர்த்து சாப்பிடலாம்; இதோ ரெசிபி!
Brinjal Masiyal :சுட்ட கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி? டிஃபன், சாதம் என இரண்டிலும் சேர்த்து சாப்பிடலாம்; இதோ ரெசிபி! (Kavitha Samayalarai )

• தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – தேவையான அளவு

(கத்தரிக்காயில் எண்ணெயைத் தடவிவிட்டு, கம்பியில் குத்தி, அடுப்பில் வைத்து நன்றாக சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். சுட்ட கத்தரிக்காயை ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஆறியபின் அதை நன்றாக கையில் மசித்து தனியாக வைத்துவிடவேண்டும். இதன் காம்பு போன்றவற்றை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். சுடும்போது கவமாக சுடவேண்டும், கருகிவிடக்கூடாது)

• எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

• பூண்டு – 6 பல்

• இஞ்சி – ஒரு இன்ச்

• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• சம்பார் பொடி – ஒரு ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• புளிக்கரைசல் – கால் கப்

(அரை எலுமிச்சை அளவு புளியை சூடான தண்ணீரில் கரைத்து, பிழிந்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்)

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமானவுடன் தக்காளியை சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்

அடுத்து உப்பு, சாம்பார் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, புளித்தண்ணீரை சேர்த்து கலந்துவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கத்தரிக்காய் மசியல் தயார்.

இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் சேர்த்தும் சாப்பிட சுவை அள்ளும். கத்தரிக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. ஆனால் இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதை சாப்பிடும்போது சிறிது கவனம் தேவை. ஆனால் எவ்வித அலர்ஜி பிரச்னைகளும் இல்லாதவர்கள் இந்தக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அலர்ஜி இல்லாவிட்டாலும் சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிடவே பிடிக்காது. அவர்களுக்கு இதுபோல் தொக்கு செய்து கொடுக்க மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு கத்தரிக்காய் என்றால் பிடிக்காது. அவர்களுக்கு இதுபோல் செய்துகொடுத்தால் சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பும் இந்த கத்தரிக்காய் மசியலை ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.