தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Brinjal Kadayal Eggplant Shop Idli Makes You Want To Eat More

Brinjal-Potato Kadayal : கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு கடையல்! இட்லி அதிகம் சாப்பிட தூண்டும்!

Priyadarshini R HT Tamil
Mar 01, 2024 04:51 PM IST

Brinjal Kadayal : கத்தரிக்காய் கடையல்! இட்லி அதிகம் சாப்பிட தூண்டும்!

Brinjal-Potato Kadayal : கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு கடையல்! இட்லி அதிகம் சாப்பிட தூண்டும்!
Brinjal-Potato Kadayal : கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு கடையல்! இட்லி அதிகம் சாப்பிட தூண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கத்தரிக்காய் – 4 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது)

(தேவைப்பட்டால் சேர்க்கலாம்)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

புளித்தண்ணி – ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

சின்னவெங்காயம் – ஒரு கைப்பிடி நறுக்கியது

செய்முறை

ஒரு குக்கரில் கடலை எண்ணெய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முழு பச்சை மிளகாய் என அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விடவேண்டும்.

குக்கர் அடங்கியவுடன், அனைத்தையும் நன்றாக மசித்துவிடவேண்டும். புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

பின்னர் கடலை மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து கொதி வந்தவுடன் தாளிக்க வேண்டும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை காய்ந்த எண்ணெயில் சேர்த்து பொரிந்தவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கத்தரிக்காய் கடையலில் சேர்க்க வேண்டும்.

பின்னர் ஒரு கைப்பிடி மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். இதை கிளறிவிட்டு, இட்லிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

வழக்கமான சாம்பார், சட்னிகள் போர் அடித்துவிட்டால், இதை செய்து சாப்பிடலாம்.

கத்தரிக்காயின் நன்மைகள்

கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.

அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.

கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்