Bread Dosa: பிரெட்டுல தோசையா.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கா? டேஸ்ட்டும் அசத்தலாக இருக்கும்!
எப்போதும் ஒரே தோசை சாப்பிட்டு பலருக்கும்போர் அடித்து விடும். அதனால் வித்தியாசமாக பிரட்களை பயன்படுத்தி இதுபோன்ற தோசையை ஒருமுறை செய்து பாருங்கள். இவை மிருதுவாகவும் வரும். குழந்தைகள் கண்டிப்பாக விரும்புவார்கள். சிறந்த காலை உணவு செய்முறை என்று சொல்லலாம். இதைச் செய்வது மிகவும் எளிதானது.
பொதுவாக காலை உணவை நாம் வித்தியாசமாகவும் ருசியாகவும் சாப்பிடுவது அந்த நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலை அளிக்க உதவும். இந்த நிலையில் குறைந்தது வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது தோசை சாப்பிடுபவர்கள் உண்டு. எப்போதும் ஒரே தோசை சாப்பிட்டு பலருக்கும்போர் அடித்து விடும். அதனால் வித்தியாசமாக பிரட்களை பயன்படுத்தி இதுபோன்ற தோசையை ஒருமுறை செய்து பாருங்கள். இவை மிருதுவாகவும் வரும். குழந்தைகள் கண்டிப்பாக விரும்புவார்கள். சிறந்த காலை உணவு செய்முறை என்று சொல்லலாம். இதைச் செய்வது மிகவும் எளிதானது.
பிரட் தோசைகள் செய்முறைக்கான பொருட்கள்
பிரட் துண்டுகள் - நான்கு
உப்மா ரவா - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
வெங்காயம்- அரை கப்
இஞ்சித் துருவல் - இரண்டு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - போதுமானது
சீரகம் - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்க
பிரட் தோசை செய்முறை
1. இந்த தோசைகளுக்கு பிரவுன் பிரட் நல்லது. ஏனெனில் அவை கோதுமையால் தயார் செய்யப்படுகிறது.
2. அதேசமயம் வெள்ளை பிரட் மைதா மாவில் தயாரிக்கப்படுகிறது. இது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
3. எனவே பிரவுன் பிரட்டை எடுத்து மிக்ஸிஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
4. அதனுடன் ரவா, அரிசி மாவு, உப்பு, சீரகத்தூள் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
5. இந்த கலவையை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
6. இந்த முழு கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தோசை மாவு செய்ய தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்த கொள்ள வேண்டும்.
7. இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவ வேண்டும்.
8. பின்னர் ஏற்கனவே ரெடி செய்து வைத்த மாவை தோசை போல் ஊற்ற வேண்டும்.
9. தோசை நன்றாக வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம். இந்த பிரட் தோசையுடன் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பிரெட் தோசையில் நாம் ஆரோக்கிய நன்மை தரும் பொருட்களை பயன்படுத்தியுள்ளோம். அதனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக பிரவுன் ரொட்டியைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மைதாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதில் அரிசி மாவும், உப்புமா ரவாவும் நமக்கு நல்லது. வெங்காயத் தார், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் இவை அனைத்திலும் பல சத்துக்கள் உள்ளன. இதை பிரட் தோசையை மசாலா தோசையாகவும் மாற்றலாம். உருளை கிழங்கு மசாலாவை சமைத்து இந்த தோசைக்கு நடுவில் வைத்தால் போதும். சுவையான மசாலா தோசை ரெடி. இதை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும். அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்.
இந்த தோசையின் மீது லேசாக இட்லி பொடி தூவி நெய் சேர்த்து செய்தால் மிகவும் வாசனையாகவும் இருக்கும்.