Bread Chilli : பிரட் சில்லி – சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவை நிறைந்தது!
Bread Chilli : பிரட் சில்லி – சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவை நிறைந்தது!
தேவையான பொருட்கள்
பிரட் டோஸ்ட் செய்ய
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – 3 ஸ்பூன்
சில்லி பிரட் செய்ய
எண்ணெய் – 3 ஸ்பூன்
பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – கால் ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
வினிகர் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
மிளகாய் விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – ஒன்றரை ஸ்பூன்
தண்ணீர் – கால் கப்
வெங்காயத்தாள் வெங்காயம் – ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் – கைப்பிடியளவு
கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு
செய்முறை -
பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவேண்டும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து விடவேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவேண்டும்.
சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவேண்டும்.
அடுத்து டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாற வேண்டும். காரமான சில்லி பிரட் தயார்.
இது சுவையானது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இதை வீட்டிலேயே செய்துகொடுப்பது நல்லது. இங்கே கொடுக்கப்பட்டுள்ளதுபோல் செய்தால், சுவை நன்றாக இருக்கும். இது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான் என்றாலும், குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். இதை மாலைவேளையில் டீயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை எளிதாக செய்து முடித்துவிடலாம். இதன் சுவையில் மயங்கி குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.
டாபிக்ஸ்