மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று பாருங்கள்!

மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 07, 2025 06:22 AM IST

மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று பாருங்கள்!
மூளை பயிற்சி : உங்கள் மூளையை கடுமையான காரியங்களை செய்ய ஊக்குவிப்பது எப்படி என்று பாருங்கள்!

சவுகர்யமான சூழலில் இருந்து வெளியேறுங்கள்

நீங்கள் புதிய விஷயங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். புதிய அனுபவங்களை முயற்சிக்கவேண்டும். உங்களுக்கு சவுகர்யமான இடத்தில் இருந்து நீங்கள் வெளியேறுவது மிகவும் அவசியம். அதை எப்போதும் செய்துகொண்டிருக்காமல் தேவைப்படும் நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்துவிடவேண்டும். குறிப்பாக நீங்கள் செய்ய அஞ்சும் விஷயங்களை செய்யவேண்டும். நீங்கள் எவ்வளவு உங்களை வருத்திக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களால் கடுமையான விஷயங்களை கையாள முடியும். நீங்கள் அந்தளவுக்கு சக்தியானவர்களாக மாறுகிறீர்கள்.

கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொண்டு தியானம் செய்யுங்கள்

உங்களின் மனதை அமைதிப்படுத்தும் சிறந்த வழிகளுள் ஒன்று, உங்களின் எண்ணங்களை வரிசைப்படுத்துங்கள். தியானம், உங்களுக்கு சவால்களை சந்திகக் உதவும். தியானத்தின் மற்றொரு முக்கியமான நன்மையென்றால், அது உங்களை கவனமுடன் செயல்பட வைக்கும். உங்களின் சிந்தனைகள் குறித்து நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். உங்களின் மனதை தெளிவாக்கி, கடுமையான காரியங்களை செய்ய முயற்சிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி மகிழ்ச்சிகரமானதும், ஆரோக்கியமானதும் ஆகும். உங்களின் மூளையை கடும் வேலைகளை செய்யத் தூண்டும் வழிகளுள் ஒன்று. உங்களின் மோட்டார் திறன்களை வளர உடற்பயிற்சி உதவுகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும், ஆற்றலையும் கொடுக்கிறது. இது உங்கள் உடலில் டோப்பமைன் அளவை அதிகரிக்கிறது. இது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட செய்கிறது. இது உங்களை கடுமையான பணிகளை செய்வதற்கு அனுமதிக்கிறது.

மூளைப் பயிற்சிகளை முயற்சியுங்கள்

பசில்களுக்கு தீர்வு காணுங்கள், சுடோக்கு விளையாடுங்கள். இது மகிழ்ச்சிகரமாக நீங்கள் நேரம் செலவிட உதவும். அதனுடன் உங்களின் கவனத்தையும் அதிகரிக்கும். மூளை பசில்கள் உங்களின் கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்க்க உதவும். இது உங்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கும். இது உங்களின் நினைவாற்றலை மேம்படுத்தும். கவனம் மற்றும் மூளையின் நெகிழ்திறனை அதிகரிக்கும். உங்களின் மனதை ஷார்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்யும்.

சிறிய இலக்குகளை காட்சிகளாக்குங்கள்

நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பணியில் சில விஷயங்களை செய்கிறீர்கள் என்றால், உங்களின் வேலைகள் குறித்து திட்டமிடுங்கள். இது உங்களை கவனத்துடன் செயல்படவைக்கும். இது உங்களுக்கு நேரத்தை முறையாக செலவிடவும் உதவும். உங்களின் இலக்குகளை சிறிய துண்டுகளாக்கிக்கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒவ்வொன்றாக முடிக்க முயற்சி செய்யுங்கள்.

இசை

இசை, மனிதர்களை காக்கும் கடவுள் என்று கூறலாம். அமைதியாக சிறிது நேரம் இசையை ரசியுங்கள். உங்களின் திறனை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், நீங்கள் உங்களுககு பிடித்த பாடல்கள் கொண்ட ப்ளே லிஸ்டை உருவாக்குங்கள். இசை உங்களின் கவனத்தை அதிகரிக்கும். செயல்திறனை உயர்த்தும். சில குறிப்பிட்ட இசை உங்களை மாற்றும். உங்களுக்கு அமைதியைத் தரும். அது உங்கள் சூழலை மாற்றும். உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். உற்சாகம் தரும். உங்கள் உடலுக்கும் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.

வளர்ச்சி மனநிலை

சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களாக மாற்றுங்கள். உங்களால் முடியும் என்றால், முடியும். மனிதர்கள் வளர்ச்சி மனநிலையைக் கொண்டு இருக்கவேண்டும். பிரச்னைகளை எப்போதும் நீங்கள் அச்சுறுத்தல்களாகப் பார்க்காமல் நேர்மறை சிந்தனை மனநிலையாக மாற்றவேண்டும். உங்களின் தவறுகளை ஏற்கவேண்டும். அவற்றில் இருந்து கற்கவேண்டும். அவற்றை தோல்விகளாகக் கருதக்கூடாது. நீங்கள் சில விஷயங்கள் குறித்து பாதிக்கப்பட்டால், ஒருமுறை அல்லது இருமுறை அல்லல்படுவீர்கள். மூன்றாவது முறை வெற்றி கொள்வீர்கள்.

உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்

உங்களுக்கு நீங்கள்தான் மிகப்பெரிய ஊக்க சக்தி என்பதை மனதில்கொள்ளுங்கள். மற்றவர்களை விட நீங்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளவேண்டும். உங்களின் திறன்களை நம்புங்கள். அவற்றின் மீது எப்போதும் சந்தேகம் கொள்ளாதீர்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள். உங்களின் திறன் எல்லையற்றது. முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையுடன் எடுத்து வையுங்கள். அது உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரும்.

காட்சி

சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும் முக்கியமான விஷயங்களுள் ஒன்று, நீங்கள் வெற்றிகளை நோக்கி நகர்வதைப் போல் காட்சிப்படுத்திக்கொள்வது, உங்களின் ஆசையை நிறைவேற்ற உதவும். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உங்கள் மனம் செய்யட்டும். உருவாக்குங்கள், தீருங்கள், முன்னேறிச் செல்லுங்கள்.