தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brain Health : உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்ங்க!

Brain Health : உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 12:20 PM IST

Brain Health : உங்கள் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் என்ன தெரியுமா?

Brain Health : உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்ங்க!
Brain Health : உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்ங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

திரையில்லாத நேரம்

அதிகளவு நீங்கள் திரையை பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் கண்களுக்கு அழுத்தம் தரும் மற்றும் மூளையை அதிகளவில் தூண்டும். எனவே நீங்கள் உபயோகிக்கும் டிவைஸ்களை சிறிது நேரம் அணைத்துவையுங்கள். 

நாள் முழுவதும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது அது உங்கள் மனதை அமைதியாக வைக்காது. மாறாக நீங்கள் நடை அல்லது இயற்கையை அனுபவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தத்தை குறைத்து அதிகம் வாழுங்கள்

மனஅழுத்தத்தை சரிசெய்ய ஆரோக்கியமான வழிகளை கண்டுபிடியுங்கள். மனநிம்மதியைக் தரும் தியானங்கள், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகள் ஆகியவற்றை செய்யுங்கள். 

எனவே மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். இதன் மூலம் உங்களின் மனம் அமைதி பெறும். உங்களின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்.

சரிவிகித உணவு

தினமும் சரிவிகித உணவு என்பது அனைவருக்கும் அத்யாவசியமானது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

காய்கறிகள் மற்றும் பழங்கள், முழுதானியங்கள், புரதம் ஆகியவற்றை உங்கள் உணவுடன் நேர்த்துகொள்வது உங்கள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

தரமான உறக்கம்

நல்ல தரமான 9 மணி நேர உறக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவை. அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுபோல் உறங்குவது உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி, உங்கள் நினைவாற்றலை பெருக்குகிறது. 

தொடர்ந்து உறங்குவதை பழக்குங்கள். தினமும் ஒரே நேரத்தில் உறங்கி எழுவது கட்டாயம். அப்போதுதான் உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுங்கள்

உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் உதவுவதுபோல், உங்கள் மூளைக்கும் சில பயிற்சிகள் அன்றாடம் கொடுக்கப்படவேண்டும். 

உங்கள் மூளையை பசில்கள், கிராஸ்வேர்ட், சுடோக்கு மற்றும் ப்ரைன் டீஸர் விளையாட்டுகள் மூலம் சுறுசுறுப்பாக்குங்கள். இந்த நடவடிக்கைகள் உங்கள் நரம்பு மண்டலத்தை தூண்டும். நினைவாற்றலைப் பெருக்கி, அறிவாற்றலை வளர்க்கும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். குடும்பத்தினர் மற்றும் உங்களுக்கு அன்பானவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். உரையாடலில் ஈடுபடுங்கள். சமூக சங்கங்களில் சேருங்கள். 

தன்னார்வலராகுங்கள். இது உங்கள் உறவுகளை வளர்க்க உதவும். பலமான சமூக பிணைப்புகள் உங்கள் மனதுக்கு ஊக்கமளிக்கும். மனஅழுத்தத்தை குறைக்கும் உங்கள் மூளையை கூராக்கும்.

நேர்மறையான பழக்கங்கள்

உங்களின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உங்கள் மூளையை பாதிக்கும். அவை புகைபிடித்தல், அதிகப்படியான குடி, உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை ஆகியவையும் நல்லதல்ல.

மாறாக நேர்மறையான பழக்கங்களை கடைபிடியுங்கள். வழக்கமான உடற்பயிற்சிகள், தியானம் மற்றும் பழக்கவழக்கங்கள் உங்கள் மனதை தூண்டும்.

புத்தகங்கள் படியுங்கள்

வாசிப்பு மிகவும் நல்லது. உங்கள் மூளையைக்காக்கும், உங்கள் அறிவை விரிவாக்கும். எனவே கதைகள், புனைவுகள் மற்றும் பத்திரிக்கைகள் என நீங்கள் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். புதிய உலகத்தில் சஞ்சரியுங்கள், வெவ்வேறு கோணங்கள் உங்களுக்கு புரியும். உங்களின் அறிவுக்கு சவால் விடுங்கள்.

பாதுகாப்பு முக்கியம்

உங்கள் மூளையில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாமல் காத்துக்கொள்வது நல்லது. எனவே பயணங்களுக்கு ஹெல்மெட் அணியுங்கள். காரில் சீட் பெல்ட் அணிந்து அமருங்கள், முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். முன்னெச்சரிக்கையுடன் நடந்து, பிரச்னைகளை குறையுங்கள். மூளையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்