Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்கவேண்டுமா? இந்த 10 காலை பழக்கங்கள் உதவலாம் என நம்பப்படுகிறது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்கவேண்டுமா? இந்த 10 காலை பழக்கங்கள் உதவலாம் என நம்பப்படுகிறது!

Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்கவேண்டுமா? இந்த 10 காலை பழக்கங்கள் உதவலாம் என நம்பப்படுகிறது!

Priyadarshini R HT Tamil
Jan 25, 2025 06:00 AM IST

Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்க உதவுவதாக நம்பப்படும் 10 காலை பழக்கங்கள் என்னவென்று பாருங்கள்.

Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்கவேண்டுமா? இந்த 10 காலை பழக்கங்கள் உதவலாம் என நம்பப்படுகிறது!
Brain Health : மூளை ஆரோக்கியத்தை காக்கவேண்டுமா? இந்த 10 காலை பழக்கங்கள் உதவலாம் என நம்பப்படுகிறது!

காலையில் இடையூறுகளை தவிர்க்கவேண்டும்

காலையில் எழுந்தவுடன் மெயில்களை செக் செய்வது, சமூக வலைதளங்களை பார்ப்பது, செய்திகளில் மூழ்குவதை முதல் ஒரு மணி நேரத்துக்கு கட்டாயம் தவிர்க்கவேண்டும். இதுபோன்ற இடையூறுகளை குறைத்துக்கொள்வது உங்களின் அன்றைய நாளில் நீங்கள் கவனம் செலுத்த உதவும். மனஅழுத்தத்தைக் குறைக்கும் உங்களின் மூளையை பல்வேறு டாஸ்குகள் செய்ய ஆயத்தப்படுத்தும். அதை அதிகம் தூண்டாது.

மிதமான உடற்பயிற்சி

நீங்கள் காலையில் எப்போதும் மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். வேக நடை, கொஞ்சம் உடற்பயிற்சிகள் செய்யும்போது, அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லும் அளவை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் இருந்து வெளியாகும் நரம்பியல் காரணி, உங்கள் நினைவாற்றல், கற்றல் மற்றும் ஒட்டுமொத்த நினைவாற்றல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது

காலையில் எழுந்தவுடன் உறக்கத்தில் இழந்த நீர்ச்சத்துக்கள் இழப்பை சரிசெய்ய தண்ணீர் கட்டாயம் பருகவேண்டும். நீர்ச்சத்துக்கள் இழப்பு மூளையின் வேலையைக் குறைக்கும். எனவே உங்கள் நாளை நீங்கள் தண்ணீருடன் துவங்குவது உங்களின் மனத்தெளிவை முறைப்படுத்தவும், ஆற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் உதவும். இதில் கொஞ்சம் எலுமிச்சை சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு நல்ல வைட்டமின் சத்துக்கள் நிறைந்ததாகும்.

காலை நேர சூரிய ஒளியில் குளியல்

காலையில் சூரிய ஒளியில் குளிப்பது உங்கள் உடலில் செரோட்டினின் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் மெலோட்டினின் உற்பத்தியை முறைப்படுத்துகிறது. இது உங்களின் மனநிலையை அதிகரிக்கிறது. உறக்க சூழற்சியை மேம்படுத்துகிறது. மூளையின் கூர்மைக்கும் உதவி, ஆற்றலை அதிகரிக்கிறது.

ஆரோக்கிய காலை உணவு

காலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். முட்டைகள், பெரிகள், நட்ஸ்கள், முழுதானியங்களை சாப்பிடவேண்டும். இது உங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கும். உங்கள் உடலில் ஆற்றலை மெதுவாக வெளியிடும். இது மூளை ஆரோக்கியத்துக்கு உதவும். உங்களின் கவனத்தை மேம்படுத்தும். உங்களின் செயல் திறனை அதிகரிக்கும்.

தியானம்

நீங்கள் சில நிமிடங்கள் அதிகாலை தியானத்தில அமரவேண்டும். மனநிறைவு அல்லது தியானம் என்பது மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையில் க்ரே மேட்டர் என்பதை அதிகரிக்கிறது. இதுதான் நினைவாற்றலை, உணர்வுகள் கட்டுப்பாட்டை, பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது. அமைதியை ஏற்படுத்தி, மனநிலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.

நேர்மறையான மற்றும் புதிய விஷயங்களை படிக்கவேண்டும்

காலையில் எழுந்தவுடன், முதல் 15 நிமிடங்கள் வாசிக்கவேண்டும். கற்றல், பசில்களை தீர்ப்பது என செலவிடவேண்டும். புதிய விஷயங்களை உங்கள் மூளைக்குக் கொடுக்கும்போது, அது உங்கள் மூளையைத் தூண்டுகிறது. நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறது. கிரியேட்விட்டியை மேம்படுத்துகிறது. உங்கள் மூளையை கூராக்குகிறது. சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறது.

உங்கள் சிந்தனைகளை எழுதுவது மற்றும் நன்றி

உங்களின் இலக்குகள், சிந்தனைகள் மற்றும் நன்றி ஆகியவை குறித்து எழுதும்போது உங்களின் மனத்தெளிவு அதிகரிகிகறது. இது உங்களின் உணர்வு நலன்களுக்கு நல்லது. எழுதுவது நேர்மறை மனநிலையை உருவாக்குகிறது. இது பதற்றத்தைக் குறைக்கிறது. பிரச்னைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது. உங்களின் சிந்தனைகளை நீங்கள் முறைப்படுத்த உதவுகிறது.

யோகா அல்லது உடற்பயிற்சி

காலையில் எளிய உடற்பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை வெளியிட உதவுகிறது. இது உங்களின் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. உங்களின் மனம் மற்றும் உடலை அந்த நாளின் வேலைகளுக்கு தயார்படுத்துகிறது.

வழக்கமான எழுந்திருக்கும் நேரம்

நீங்கள் அதிகாலையில் கண் விழிக்கும் நேரம் வழக்கமானாதாக இருக்கவேண்டும். இது உங்கள் உடலில் உறக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிறது. இது உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கிறது. உங்களுக்கு தொடர்ந்து நல்ல பழக்கங்கள் ஏற்பட அனுமதிக்கிறது. மூளை சுறுசுறுப்பின்றி தேங்குவதை குறைக்கிறது. கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. நாள் முழுவதும் உற்சாகம் தருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.