மூளை ஆரோக்கியம் : 50 வயதுக்கு மேல் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமா? என்ன செய்வது பாருங்கள்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மூளை ஆரோக்கியம் : 50 வயதுக்கு மேல் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமா? என்ன செய்வது பாருங்கள்?

மூளை ஆரோக்கியம் : 50 வயதுக்கு மேல் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமா? என்ன செய்வது பாருங்கள்?

Priyadarshini R HT Tamil
Published May 12, 2025 07:00 AM IST

மூளை ஆரோக்கியம் : எச்சரிக்கையுடன் இருக்க முடியும். உங்களின் 50 வயதிலும் மூளை நன்றாக இயங்கும். உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். இதனால் உங்கள் மூளை ஆரோக்கியம் நீண்ட காலம் இருக்கும்.

மூளை ஆரோக்கியம் : 50 வயதுக்கு மேல் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமா? என்ன செய்வது பாருங்கள்?
மூளை ஆரோக்கியம் : 50 வயதுக்கு மேல் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமா? என்ன செய்வது பாருங்கள்?

புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது, உங்களின் நரம்பு மார்க்கங்களை வலுப்படுத்தும். அது நீங்கள் புதிய மொழியை கற்பதாகட்டும் அல்லது புதிய இசைக் கருவியை வாசிப்பதாகட்டும், புதிய பழக்கத்தை பழகுவதாகட்டும், இந்த செயல்கள் உங்களின் மூளைக்கு சவாலானவையாகும். இது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகள், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, அது புதிய மூளை செல்களை வளரச் செய்யும். நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் அல்லது சிறிய உடற்பயிற்சிகளும் உங்கள் மூளையை ஷார்ப்பாக்க உதவக்கூடியவைதான்.

மூளைக்கு உகந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்

பெரிகள், கீரைகள், வால்நட்கள், ஒமேகா 3 நிறைந்த ஃப்ளாக்ஸ் விதைகள் அல்லது சியா விதைகள் என ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் என மூளைக்கு உகந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். இது உங்கள் நினைவாற்றலுக்கு உதவும். மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அதை எதிர்த்து போராடும்.

உறக்கத்துக்கு முன்னுரிமை

போதிய மற்றும் அமைதியான உறக்கம், உங்கள் நினைவாற்றலை ஒருங்கிணைக்க முக்கியமானது. இது மூளையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரங்கள் தரமான உறக்கத்தை உறுதி செய்யுங்கள். அது உங்கள் மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

தியானம்

மூளை ஆரோக்கியத்தின் முக்கியமான காரணியே தியானம்தான். இது உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது உங்களின் கவனத்தை அதிகரிக்கும். உங்களின் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தினமும் சில நிமிடங்கள் நீங்கள் செய்யும் தியானம், உங்களுக்கு நீண்ட கால நன்மைகளைக் கொடுக்கும்.

வாசிப்பு

நீங்கள் அன்றாடம் வாசிக்க வேண்டியது அவசியம். அது உங்களின் கவனத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு புதிய வார்த்தைகளை தெரியப்படுத்துகிறது. உங்களின் கற்பனை வளத்தை மேம்படச் செய்கிறது. எனவே நீங்கள் உரையாடல் மற்றும் எழுதும்போது அவற்றை உபயோகியுங்கள். நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது உங்களின் உரையாடலை மேம்படுத்துகிறது. உங்களின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது உங்கள் மூளையின் இயக்கத்தை தடுக்கும். எனவே முழு உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் மூளையை பாதுகாக்க ரிபைஃண்ட் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

சமூகத்துடன் தொடர்பில் இருங்கள்

உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக குழுக்களில் அர்த்தமுள்ள தொடர்பில் இருக்கவேண்டும். இது உங்கள் மூளையைத் தூண்டும், உங்களுக்கு நினைவாற்றல் இழக்கும் ஆபத்தைக் குறைக்கும். மூளை தொடர்பான பிரச்னைகளைத் தடுக்க உதவும். உரையாடல்கள், விவாதங்கள் உங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

மற்றவை

பார்வை மற்றும் கேட்கும் திறன் ஆகியவை உங்கள் மூளை ஆரோக்கியத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். எனவே கண்கள் மற்றும் காதுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் சரிசெய்துகொள்வது உங்களின் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்துக்கும் நல்லது.