Bra : எடுப்பான தோற்றத்திற்காக பேட் பிரா பயன்படுத்தும் பெண்களே.. அது உங்களுக்கு அழகா? ஆபத்தா? வாங்க பார்க்கலாம்!-bra ladies who use a pad bra for a flattering look is it cute for you is it dangerous lets buy - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bra : எடுப்பான தோற்றத்திற்காக பேட் பிரா பயன்படுத்தும் பெண்களே.. அது உங்களுக்கு அழகா? ஆபத்தா? வாங்க பார்க்கலாம்!

Bra : எடுப்பான தோற்றத்திற்காக பேட் பிரா பயன்படுத்தும் பெண்களே.. அது உங்களுக்கு அழகா? ஆபத்தா? வாங்க பார்க்கலாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 19, 2024 01:22 PM IST

Bra : பேட் இல்லாத பிராவுக்கும் பேட் உள்ள ப்ரா இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா.. பேட் வைத்து வடிவமைக்கப்பட்ட ப்ரா என்றால் தடிமனான கப்கள் ப்ராவிற்குள் வைக்கப்பட்டுள்ளன. இவை அணிவது மிகவும் எளிது.

Bra : எடுப்பான தோற்றத்திற்காக பேட் பிரா பயன்படுத்தும் பெண்களே.. அது உங்களுக்கு அழகா? ஆபத்தா? வாங்க பார்க்கலாம்!
Bra : எடுப்பான தோற்றத்திற்காக பேட் பிரா பயன்படுத்தும் பெண்களே.. அது உங்களுக்கு அழகா? ஆபத்தா? வாங்க பார்க்கலாம்!

பேட் இல்லாத பிராவை விட, பேட் செய்யப்பட்ட ப்ரா மார்பகங்களுக்கு சிறந்த ஆதரவையும் எடுப்பான தோற்றத்தையும் வழங்குகிறது. நவீன காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் சிறந்த தயாரிப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த பிரா மார்பகங்களுக்கு முழுமையான வடிவத்தை அளிக்கிறது. அமைப்பை வட்டமாக பார்க்க வைக்கிறது.

ஒரு பேட் செய்யப்பட்ட ப்ராவில் இலகுரக பட்டைகளைப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதிக எடை இல்லை. மேலும், அவை மென்மையாகவும் இருக்கும். சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அவற்றை அணிவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் இவை மார்பகங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் எந்த பெண்கள் வேண்டுமானாலும் அணியலாம்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது

பொதுவாக பெண்களை பொறுத்த மட்டில் பிரா அழகு, நம்பிக்கையை அதிகரிக்கும். ஒரு பெண் தன் தோற்றத்தை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறாளோ, அந்த அளவுக்கு அவளிடம் தன்னம்பிக்கை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேட் செய்யப்பட்ட பிரா அணிவதால் உடல் அழகாக இருக்கும். இது உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இது மிகவும் வசதியானது. வழக்கமான ப்ராக்கள் மெல்லியதாக இருக்கும். இவை அதிக வசதியை தருவதில்லை. பேட் பிராக்கள் மார்பகங்களின் எடையைத் தாங்கும். எனவே ஆதரவு மட்டுமல்ல, மார்பளவு கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது.

மார்புப் பகுதியில் அழகான வடிவத்தை விரும்புபவர்கள் பேட் செய்யப்பட்ட பிராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் தனியாக தேவையான நேரங்களில் மட்டும் வைத்துக் கொள்ள வசதியாக தனிப்பட்ட பேடுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களும் பேட் செய்யப்பட்ட பிரா அணிந்தால், பிரச்சனை தீரும். டி-ஷர்ட், பிளவுஸ், குர்தா என எதை அணிந்தாலும் பேட்டட் பிரா அணிந்தால் அழகாக இருக்கும். இவற்றை முயற்சிக்கவும்.

ப்ராவில் இத்தனை விஷயம் இருக்கா

ஒரு பேட் செய்யப்பட்ட பிரா உங்கள் அலமாரியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தான் பெண்களுக்கு உள்ளாடை போல் பிரா அணிகின்றனரா என்றால் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் பிரா அணிந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிரேக்க-ரோமன் காலத்தில் பெண்கள் பிரா அணிந்திருப்பதை வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எகிப்தியப் பெண்கள் தோலால் செய்யப்பட்ட பிரா அணிந்திருந்ததாகத் தெரிகிறது. நவீன ப்ராக்களின் வரலாற்றைப் பொறுத்தவரை, அவை பிரான்சில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அனைத்து நாடுகளிலும் பிரா உற்பத்தி தொடங்கியுள்ளது. பெண்களும் இவற்றை அணிவதன் சுகத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், இரவில் பெண்கள் அதிக இறுக்கமான உள்ளாடைகளை அகற்றுவது இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.