Boy Baby Names : உங்கள் ஆண் குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை வைக்க ஆசையா? இதோ இதைப் பாருங்கள்!
Boy Baby Names : உங்கள் ஆண் குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை வைக்க ஆசையா? இதோ இதைப் பாருங்கள், உங்களுக்கு ஏற்ற பெயர் கிடைக்கும்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்
இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும்.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
நிகில்
முழுமையான மற்றும் ழுமு என்று பொருள். உங்கள் வாழ்க்கையை முழுமையாக்கியவர் உங்கள் மகன் என்பது இதன் அர்த்தமாகும். அதிகாரம் நிறைந்தவர் என்ற அர்த்தத்தையும் தரும் பெயர். இந்து மதத்தின் பெயராகவும். தெலுங்கை தோற்றமாகவும் கொண்ட பெயர்.
தீபக்
தீபக், தீபம், ஒளி, விளக்கும் உங்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். உங்கள் வாழ்வின் வெளிச்சம் ஆகிய அர்த்தங்களைத் தரும் பெயர். சமஸ்கிருதத்தின் ஒளி என்ற வார்த்தையில் இருந்து இந்தப்பெயர் வந்தது. இந்து மதத்தில் ஒளியேற்றுவது என்பது இருளைப்போக்குவது, தீமையை வெல்வது என்ற அரத்தத்தை தரும்.
கிரண்
கிரண் என்றால் ஒளியின் கீற்று என்று பொருள். ஒளி வெளிச்சம், இந்தப்பெயர் இந்தியா மற்றும் நேபாளி தோற்றத்தை கொண்டுள்ளது. கிராணா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து இந்தப்பெயர் வருகிறது. கிராணா என்றால் ஒளி என்று பொருள். இவர்கள் நல்ல உரையாடுபவர்களாகவும், சமூகத்தில் யாருடனும் எளிதில் சேர்ந்துகொள்பவர்களாகவும், எந்த இடத்தையும் ஏற்பவராகவும் இருப்பார்கள்.
ஆதித்யா
ஆதித்யா என்றால் சூரியன். சூரியன் போன்ற பிரகாசமானவர் உங்கள் மகன். ஆதி என்றால் முதல் என்று பொருள். இந்தப்பெயரை நீங்கள் சுருக்கமாக கூப்பிட்டாலும், அதுவும் அர்த்தம் நிறைந்தது. எதிலும் முதன்மையாக இருப்பவர்.
சரண்
சரண் என்றால், இருப்பிடம் அல்லது அகதி, சரணடைதல் என்ற வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர். சரணாகதி என்பது சமஸ்கிருத வார்த்தை. பாதுகாப்பு என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது.
ரோகன்
ரோகன் என்றால் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பதைக் குறிக்கும். இது ஐரிஷ் தோற்றத்தைக் கொண்ட பெயர்.
அக்ஷய்
நித்தியமான அல்லது அழியாத என்று பொருள். குறையாத, தேயாத, வற்றாத என்பனவற்றை குறிக்கிறது. பூரணமான இந்தப்பெயர்களைக்கொண்ட உங்கள் குழந்தைகள் பூரணமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதிலும் நிறைவானவர்களாக இருப்பார்கள் என்பதை இந்தப் பெயர் குறிப்பிடுகிறது. அக்ஷா என்றால் அழியாத, எப்போதும் நிலைத்திருக்கும் என்று பொருள். அயா என்றால் தொடர்ந்து செல்லும், சென்றுகொண்டயிருக்கும் என்று பொருள். மாற்றமில்லாத என்பதையும் குறிக்கிறது.
ரவி
ரவி என்பது சூரியனின் பெயர்களுள் ஒன்று. சமஸ்கிருதத்தில் ரவி என்றால் சூரியன் என்று பொருள். ஒளி மற்றும் பிரகாசம் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது. சூரியன் வாழ்க்கை, ஆற்றல் மற்றும் சக்தி என்பதை குறிக்கிறது. இந்த பெயரைக் கொண்டவர்களுக்கு இந்த குணங்கள் நிறைந்திருக்கும். நேர்மறையானவர்களாக இருப்பார்கள். பிரகாசமான, உற்சாகமான, அறிவாளியான, நட்புடன் பழகக்கூடியவராக இருப்பார்கள்.
பிரசாத்
பிரசாத் என்றால் கடவுளின் பரிசு என்று பொருள். இது சமஸ்கிருத வார்த்தை பிரசாத என்பதில் இருந்து தோன்றியது. பிரகாசமான அல்லது கருணை என்று இதற்கு பொருள். புனித காரியங்களுக்கு வினியோகம் செய்வதற்காக தயாரிக்கப்படும் உணவுப்பொருள் என்று பெயர்.
சமீர்
சமீர் சமஸ்கிருதம், அரபி என இரண்டு தோற்றத்தைக் கொண்டது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக இந்தப்பெயர் வைக்கப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்