Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள்; ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தத்தை தருபவை!-boy baby names unique boy baby names meaning blessings - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள்; ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தத்தை தருபவை!

Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள்; ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தத்தை தருபவை!

Priyadarshini R HT Tamil
Aug 11, 2024 12:24 PM IST

Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தம் வரும்.

Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள்; ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தத்தை தருபவை!
Boy Baby Names : தனித்தன்மையான ஆண் குழந்தைகளின் பெயர்கள்; ஆசிர்வாதங்கள் என்ற அர்த்தத்தை தருபவை!

கடவுளின் ஆசிர்வாதம்

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்ற அர்த்தம் கொண்ட பெயர்களை வைக்க விரும்பினால், உங்களுக்கு இந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் உதவும். ஒவ்வொரு பெயருக்கும் சிறப்பு அர்த்தம் உள்ளது. கடவுளின் பரிசு என்பதை குறிக்கும் பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆயான்ஷ்

ஆயான்ஷ், ஆயான்ஷ் என்பது அழகிய பெயர், அதற்கு கடவுளின் பரிசு என்று பொருள். இந்தப் பெயர் கடவுளின் ஆசிர்வாதம் என்பதை காட்டுகிறது. நமது குடும்பத்துக்கு கடவுள் தரும் ஆசிர்வாதமாக கருதினால் இந்தப் பெயரை உங்களுக்கு குழந்தைகளுக்கு சூட்டலாம்.

வர்யம்

வர்யம் என்றால் தனித்தன்மையானவர் என்று பொருள். ஆசிர்வாதம் அல்லது வரம் என்று இதற்கு அர்த்தம். இது உங்கள் குழந்தையின் விலைமதிப்பற்ற மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

தேவாத்மன்

தேவாத்மன் என்றால் கடவுளின் ஆர்வாதம் என்று பொருள். கடவுளுடன் உங்கள் குழந்தையை இணைக்கும் பெயர் இது. உங்கள் ஆண் குழந்தை ஆன்மீக பரிசு என்ற அர்தத்தை தருவதாகும்.

இவான்

இவான் என்பது ஒரு வசீகரமான பெயர். அதற்கு கடவுளின் பரிசு என்று பொருள். இந்தர் பெயர் உங்கள் குழந்தை கடவுளின் விலைமதிப்பற்ற குழந்தை என்ற பொருளைத் தருகிறது. சொர்க்கத்தில் இருந்து வருபவர் என்பதை குறிப்பிடுகிறது. உங்கள் வீட்டிற்கு அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்தவர் என்பதையும் காட்டுகிறது.

சோகான்

சோகான், என்பது அழகான பெயர். இது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்ற அர்த்தத்தை தருகிறது. இது அதிசய வாழ்வை நினைவூட்டுகிறது. உயர்ந்த சக்தியின் சிறப்பான ஆசிர்வாதத்தை ஒவ்வொரு குழந்தையும் எப்படி பெறுகிறது என்பதை காட்டுகிறது.

ஈஜாஸ்

ஈஜாஸ் என்றால், அதிசயம் என்று பொருள், இது அதிகப்படியான என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எதிலும் அதிகப்படியாக இருப்பது என்பது அதன் அர்த்தம் ஆகும். அந்த குழந்தையின் பிறப்பை கொண்டாடுவது, அந்தக்குழந்தை இந்த குடும்பத்திற்கு கொண்டு வந்த ஆசிர்வாதங்களை கொண்டாடுவது. இந்த குழந்தை பிறந்தது ஒரு அதிசய நிகழ்வு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ரேயான்

ரேயான் என்றால் சிறிய அரசன் என்று பொருள் அல்லது கடவுளின் பரிசு என்ற ஒரு பொருளும் உண்டு. இந்தப் பெயர் உங்கள் குழந்தையின் தெய்வீக குணத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. உங்கள் வாழ்வில் நீங்கள் முழுவதும் கொண்டாட ஆசிர்வதிக்கப்பட்டவன் என்ற பொருளை இந்தப் பெயர் கொடுக்கிறது.

அய்மான்

அய்மான் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று பொருள். இது அதிர்ஷ்டம், ஆசிர்வாதம் என்பதை காட்டுகிறது. உங்கள் வாழ்வில் இந்தக் குழந்தை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்பதை குறிப்பிடுகிறது. உங்கள் குழந்தைக்கு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை கிடைக்கும். அவனைச் சுற்றி நேர்மறையான எண்ணங்களை அவன் கொண்டு வருவான் என்பது இதன் அர்த்தம் ஆகும்.

நியாமத்

நியாமத் என்ற அழகிய பெயர், ஆசிர்வதிக்கப்பட்டவன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இது அதிகப்படியான மகிழ்ச்சி மற்றும் ஆசிர்வாதம் உங்கள் குழந்தைகள் கொண்டு வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. உங்கள் குழந்தைகள் உங்கள் வீட்டுக்கு நிறைய பரிசுகளை கொண்டு வருகிறார்கள் என்பதை காட்டுகிறது.

தனீம்

தனீம் என்றால் ஆசிர்வதிக்கப்படுபவர் என்று பொருள், இது கடவுளால் விரும்பப்படுபவர் என்ற பொருளைத்தருகிறது. ஆசிர்வாதத்தையும் குறிக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை நீங்கள் வைக்கும்போது அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கருணையை உங்கள் இல்லங்களுக்கு கொண்டுவருபவர் என்று பொருள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.