Boy Baby Names : ஆண் குழந்தைகளுக்கு வைக்க அழகான பெயர்களை தேடுகிறீர்களா? இதோ இதில் பாருங்கள்!
Boy Baby Names : ஆண் குழந்தைகளுக்கு வைக்க அழகான பெயர்களை தேடுகிறீர்களா? இதோ இதில் எத்தனை அழகான ஆண் குழந்தைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன பாருங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
ரிஷி
ரிஷி என்றால் முனிவர், புனிதமானவர் என்று பொருள். இந்தப்பெயரின் தோற்றம் சமஸ்கிருதம் ஆகும். இதற்கு கவிஞர் என்ற பொருளும் உண்டு. உன்னதமானவர், ஒளி, தெய்வீக அறிவாற்றல் பெறுபவர், நிலவு, அமைதி, குளுமை ஆகியவற்றையும் குறிக்கும்.
மகேஷ்
மகேஷ் என்றால், சிறந்த ஆட்சியாளன் அல்லது அரசன் என்று பொருள். சிவனின் மற்றொரு பெயர் மகேஷா என்பதில் இருந்து தோன்றியது. இந்து ஆண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் வைக்கப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்தவர் என்பதை குறிப்பிடுகிறது.
அரவிந்த்
அரவிந்த் என்றால் தாமரை என்று பொருள். இது இந்தியாவில் மிகவும் பிரபலமான பெயர். தாமரை மலர் தெய்வீகம் மற்றும் தெய்வ காரியங்களுடன் தொடர்புடையது. புனிதம், தெளிவு, தெய்வீகம், ஒளி, அறிவு என்பதை குறிக்கிறது.
கிஷோர்
கிஷோர் என்றால், இளமையான, இளைஞர், இளமையான தோற்றம் கொண்டவர் என்று பொருள். இது கிருஷ்ண பகவானின் மற்றொரு பெயர். இது இந்தியா மற்றும் நேபாளத்தில் வைக்கப்படும் பெயர்.
அபினவ்
அபினவ் என்றால், புதிய, புத்துணர்ச்சி, இளமை என்று பொருள். உங்கள் குழந்தை புதிய பல சாதனைகளை புரிவார். எப்போதும் புத்துணர்வுடன் இருப்பார். இந்தப்பெயர் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கும்.
ஆனந்த்
ஆனந்த் என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோசம், புன்னகை என்று பொருள். உங்கள் வீட்டுக்கு புன்னகையைக் கொண்டு வந்தவர். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க காரணமாக இருப்பவர் என்று பொருள்.
ராகவ்
ராகவ் என்றால் ரகுவின் மருஉருவம் என்று பொருள். இந்து புராணங்களில் சூரிய ஆட்சியில் கடவுளாக ரகு உள்ளார். பொருமாளின் பெயர்களுள் ஒன்று.
கோகுல்
கோகுல் என்றால் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது வளர்ந்த இடத்தை குறிக்கிறது. அது கோகுலம் என்று அழைக்கப்படும். அங்குதான் குழந்தை கிருஷ்ணர் ஓடியாடி விளையாண்டார். இந்தப்பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமான பெயர்.
விக்ரம்
விக்ரம் என்றால் ஞானம், அறிவு, வெற்றி, துணிச்சல் ஆகிய பொருள்களை தரும். இந்தபபெயரைக் கொண்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அவர்கள் பலசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
ஷ்யாம்
ஷ்யாம் என்றால் இருள் அல்லது கருமை என்று பொருள். ஷ்யாமா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர். கருமேனி வண்ணன், கிருஷ்ணனுடன் தொடர்புடைய பெயர்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்