Boy Baby Names : உங்கள் செல்ல மகனுக்கு அழகனான பெயர் வைக்க வேண்டுமா.. இந்த பெயர்களை பாருங்க!
Boy Baby Names : குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர்.
Boy Baby Names : ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் மிகவும் முக்கியமான தருணமாக பார்ப்பது தனது குழந்தை பிறக்கும் நாளைதான். சமூகத்தில் பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுக்கும் குழந்தை மீது தங்கள் அன்பை பொழிகின்றனர். வாழ்வின் அடுத்தடுத்த நகர்வுகளை தங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே நகர்த்துகின்றனர். அப்படி தனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதையும் மிகவும் கவனமாகவும், ரசனையுடன் செய்கின்றனர்.
குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர். அப்படி உங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிகொண்டு இருக்கிறீர்களா.. இதோ இந்த பெயர்கள் உங்கள் குழந்தைக்கு பொருந்துமா பாருங்கள்.
1.அகமுகிலன்
அகமுகிலன் அழகான பெயர். அகம்+முகிலன்=அகமுகிலன். அகம் என்றால் உள்ளே, வீடு, மனம் என பல பொருள் படும். முகிலன் என்றால் மேகம் என்ற பொருள்படும். ஆக அகமுகிலன் என்றால் மேகங்களை போல மென்மையான மனம் கொண்டவன் அல்லது மேகங்களை போல வாரி வழங்கும் வள்ளல் மனம் கொண்டவன் என்று எடுத்துகொள்ளலாம்.
2. அதிகன்
அதிகன் என்பது சங்ககாலக் குறுநில மன்னரின் பெயர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் அதிகன், அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்பட்டான்.
3. ஆதிரன்
ஆதிரன் என்பது சிவனின் திரு பெயர். திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் நட்சத்திரம். சிவனின் நெற்றித்கண்ணில் விழுந்த தீப்பொறிகள் இணைந்த சிவ பெருமானின் அம்சமே முருகப் பெருமான். எனினும் பொதுவாக ஆதிரன் என்ற பெயருக்கு உரியவர் சிவ பெருமான் தான்.
4.ஆதவன்
ஆதவன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல். இது பொதுவான ஆண் குழந்தைகளுக்கு உரிய பெயர். ஆதவன் என்ற சொல் நாள் கடவுளான சூரிய பகவானைக் குறிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த பெயரும் உங்கள் மகனுக்கு பொருத்தமாக இருக்கலாம்.
5. ஆத்விக்
ஆத்விக் என்ற அழகான பெயருக்கு தனித்துவம், பாசம், அன்பு என்பது பொருள் . ஆத்விக் பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும். இது ஆண் குழந்தைகளுக்கு இப்போது அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஆத்விக் என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக இவர்கள் தனது நண்பர்களுக்கு மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள். சுயநலமாக இருப்பதை விரும்பவே மாட்டார்கள். அதே போல் இவர்கள் எப்போதும் மற்றவர்களை தான் சார்ந்து இருப்பார்கள். மேலும் இவர்களிடம் இயற்கையாகவே மிகவும் உதவும் குணம் இருக்கும்.
6. அயன்
பெயரின் பொருள் 'கடவுளின் பரிசு'. அயன் என்பது விஷ்ணு பகவானின் மற்றொரு பெயர்.
7. இதயன்
தனித்துவமான உச்சரிப்புடன் கூடிய இந்த தனித்துவமான பெயர் இதயன். "இதயத்தின் மகிழ்ச்சி" என்று பொருள்படும் இதயன் என்ற பெயர் உங்கள் குழந்தைக்கு பொறுத்தமாக இருக்கலாம்.
8. அவிரோன்
அவிரோன் என்றால் பேரொளி உடையவன் என்று பொருள். உங்கள் மகன் பேரொளியால் நிலைத்து வாழ இந்த பெயரை சூட்டி மகிழலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்