Boy Baby Names : அழகான அர்த்தங்களைக் கொண்ட ஆண் குழந்தைகளின் பெயர் பட்டியல்! உங்கள் செல்வங்களுக்காக பாருங்க!
Boy Baby Names : ஆண் குழந்தைகளுக்கான அழகான பெயர்களை உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வீட்டு அழகிய ஆண் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற அழகான அர்த்தம் தரும் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சரியான பெயர்களை தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான மற்றும் மகிழ்வான தருணம். ஒரு பெயர் என்பது ஒருவரின் அடையாளம் மட்டுமல்ல, அது அவர்களின் மதிப்பு, கலாச்சாரம் என எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கியது. பெயர்களுக்கு அர்த்தங்களும் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பொருத்தமான பெயர்களை தேடிக்கண்டுபிடிப்பதும் ஒரு சவால் ஆகும். இந்திய கலாச்சாரத்தில் பெயர்களுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவை பலம், தெய்வீக குணம் மற்றும் அறம் என பல்வேறு விஷயங்களின் அடையாளமாகுகின்றன. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு நீங்கள் அழகிய அர்த்தம் கொண்ட பெயர்களை சூட்டவேண்டுமென இங்கு சில தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேதாந்த்
வேதாந்த் என்றால், ஞானம் என்று பொருள். வேதங்களில் ஞானம் பெற்றவர் மற்றும் ஒருவரின் அறிவு மற்றும் ஆற்றலைக் குறிக்கிறத. இந்திய கலாச்சாரத்தின் வேத புத்தகங்களுடன் தொடர்புடைய பெயராகும்.
சமர்
சமர் என்றால் போர் வீரன். ஆற்றல், அறிவு, நேர்மை, தைரியம், துணிச்சல் என போராளிக்கு உள்ள அத்தனை குணங்களும் கொண்டது என்று பொருள். இது உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறப்பான தேர்வாகும்.
இஷான்
இஷான் என்றால், கீழ்படிதல், ஏற்பு மற்றும் அர்ப்பணிப்பு என எண்ணற்ற அர்த்தம் கொண்ட பெயர். இது ஒரு உருது பெயராகும். ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரும் ஆகும். இது உண்மையில் மிகுந்த கீழ்படிதலுள்ளவன் என்பதைக் காட்டுகிறது.
ருத்ராட்ச்
ருத்ராட்ச் என்றால், புனித மாலை என்று பொருள். அது இறைவன் சிவனுக்கு உகந்தது. இது இந்திய கலாச்சாரத்தில் மிகவும் வேரூன்றிய பெயர். இது சக்தி, தெய்வீக குணம் மற்றும் பாதுகாப்பை குறிக்கிறது.
அயான்
அயான் என்றால் கடவுளின் பரிசு என்று பொருள். பிரகாசமான, ஒளி வீசக்கூடிய மற்றும் பளபளப்பான என்று பொருள். இதற்கு ஆசிர்வாதம் மற்றும் தெய்வத்தின் கருணை என்று பொருள். இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
ஆரிஷ்
ஆரிஷ் என்றால் அறிவான, ஞானமுள்ள, மரியாதையான மற்றும் தலைவன் என்று பொருள். ஆரிஷ் என்பது அறிவான மற்றும் சயோஜித புத்திகொண்ட தலைவர் என்ற பொருளைத் தருகிறது.
விவான்
விவான் என்றால் வாழ்வின் முழுமை மற்றும் ஆற்றல் என்று பொருள். இது பிரகாசமான, உற்சாகம் மற்றும் வாழ்வின் ஒளி என்று பொருள். இது இறைவன் கிருஷ்ணனுடன் தொடர்புடையது.
அத்வைத்
அத்வைத் என்றால் தனித்தன்மையான, இரட்டைத்தன்மையற்ற ஒற்றைத்தன்மை என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். இது இந்திய ஆன்மீகத்தில் அறிஞர் என்பதை அறிவுறுத்துகிறது.
ரேயான்ஷ்
ரேயான்ஷ் என்றால் தெய்வீக ஒளியின் அங்கம் மற்றும் ரேயான்ஷ் என்பது பளபளப்பு மற்றும் தெய்வீக சக்தி என்பதைக் குறிக்கிறது. இது நேர்மறை எண்ணம் மற்றும் தெய்வீக ஞானத்தை குறிக்கும் பெயராகும்.
இந்த அழகிய ஆண் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் எதிர்காலம் சிறக்க வழிகுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்