Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு இதோ!-boy baby names here is a collection of beautiful tamil baby boy names starting with the letter a - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு இதோ!

Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு இதோ!

Priyadarshini R HT Tamil
Sep 01, 2024 12:07 PM IST

Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு இதோ!
Boy Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு இதோ!

உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப்பெயர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? எனில் இதில் ‘அ’ எனத்துவங்கும் தமிழ்ப்பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தேர்வு செய்துகொள்ளுங்கள்.

அகத்தியன்

அகத்தியன் என்பது அகத்திய முனிவரின் பெயர். நட்சத்திரத்தைக் குறிக்கும் சமஸ்கிருதத்தை தோற்றமாகக் கொண்ட இந்திய ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்.

அகரன்

அகரன் என்பது பழமையான தமிழ்பெயர். முதல், முதலில், முதல்வன், அனைத்துக்கும் முதல்வன், முக்கியமானவன் என்ற பொருள். இந்த பெயர் ‘அ’ கரம் என்ற உயிர் எழுத்தின் முதல் எழுத்தை குறிக்கும்.

அகர முதல்வன்

அகர முதல்வன் என்ற பெயரும் கிட்டத்தட்ட அகரனை ஒத்த பெயர்தான். முதல், முதல்வன், முக்கியமானவன், முதலில் என எண்ணற்ற அர்த்தங்களைத் தரும். உங்கள் குழந்தை எதிலும் முன்னேறித் திகழ வேண்டுமெனில் இந்தப்பெயரை அவருக்கு வைக்கலாம்.

அகலன் அல்லது அகிலன்

அகிலம் என்றால் உலகம் என்று பொருள். உலகை ஆள்பவன். பெண் பால் பெயர் அகிலா உலகை ஆள்பவள் என்பதைக் குறிக்கும். அகிலன் அல்லது அகலன் என்றால் அனைத்தையும் ஆள்பவர் என்று பொருள். இந்தப்பெயர் தமிழ் மற்றும் இந்தியிலும் வைக்கப்படுகிறது.

அகவன்

அகவன் என்றால் தொடர்ச்சியான, பல்துறை ஞானம் கொண்ட, மகிழ்வு, வாழ்க்கையை கொண்டாடும் நபர் அல்லது பாராட்டுபவர் என்று பொருள். இந்தப்பெயரைக் கொண்டவர்கள் வாதத்தில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். பலசாலிகளாகவும், போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும், ஊக்கமளிப்பவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திர உணர்வுடையவர்களாக இருப்பார்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அகல்வண்ணன்

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.