Boy Baby Names : மகன் பிறந்திருக்கிறாரா? வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வின் அதிசயத்துக்கு அந்த அர்த்தத்திலே இதோ பெயர்கள்!
Boy Baby Names : உங்கள் ஆண் குழந்தைக்கு அதிசயம் என்ற அர்த்தத்தில் வரக்கூடிய பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் உங்கள் வாழ்வில் நடந்த அதிசயத்துக்கு அதே அர்த்தத்தில் பெயர் சூட்டி மகிழுங்கள். ஒவ்வொரு பெயருக்கும் அதைத்தவிர பிற அர்த்தங்களும் உள்ளது.
தனித்தன்மையான ஆண் குழந்தைகள் பெயர்
உங்கள் வீட்டுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருகிறாரா உங்கள் ஆண் குழந்தை. அவர்களுக்கு பெயர் வைப்பது உங்களுக்கு கடும் சிரமமான ஒன்றாக உள்ளதா? பெயர்களுக்கு அர்த்தங்கள் உள்ளது. அந்த அர்த்தங்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் திறனும் உண்டு.
எனவே உங்களுக்கு அதிசயம் என்ற பொருளைத்தரும் ஆண் குழந்தைகளின் பெயர்களை உங்களுக்கு தொகுத்து தருகிறோம். இது உங்கள் வீட்டு இளவரசனுக்கு நன்றாக பொருந்தும்.
ஆஷாஷ்யா
ஆஷாஷ்யா என்றால், ஆசிர்வாதம் அல்லது ஆசை என்று பொருள். இது நம்பிக்கை மற்றும் முழுமை என்பதன் அதிசயம் என்பதை குறிப்பிடுகிறது. இந்தப்பெயர் உங்களுக்கு ஆண் குழந்தைக்கு ஒரு தனித்தன்மையைக் கொடுக்கும்.
அயான்ஷ்
அயான்ஷ் என்றால் கடவுளின் பரிசு என்று பொருள். இது உங்கள் வாழ்க்கையில் கடவுளின் ஆசிரிவாதங்கள் நிறைந்த அதிசயம் என்பதை இந்தப் பெயர் பிரதிபலிக்கிறது.
இவான்
இவான், என்றாலும், கடவுன் பரிசு என்று பொருள். கடவுளிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த அதிசய பரிசு என்று பொருள். இந்த குழந்தை உங்களுக்கு கிடைத்த அதிசயம்.
நோமேன்
நோமேன் என்றால், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று பொருள். இந்தப்பெயர், ஆசிர்வாதங்களை அள்ளி வழங்கும் அதிசயம் என்ற பொருளை குறிப்பிடுகிறது. எனவே இந்தப் பெயரும் உங்கள் குழந்தைக்கு தனித்தன்மையைத் தரும்.
வர்யம்
வர்யம் என்றால், ஆசிர்வாதம் அல்லது வரம் என்ற இரு பொருள்கள் உண்டு. இது இயற்கையின் சிறப்பான பரிசு தந்த அதிசயம் என்பதை குறிக்கிறது. இந்தப் பெயர் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.
ஆத்விக்
ஆத்விக் என்றால் தனித்தன்மையானவன் என்று பொருள். இந்தப்பெயர் தனித்தன்மை மற்றும் தனித்துவத்தை கொண்டாடும் அதிசயம் என்று பொருள்.
அயான்
அயான் என்றால் கடவுளின் பரிசு அல்லது ஆன்மீகத்தில் திளைப்பவர் என்று பொருள். கடவுளின் பரிசு மற்றும் நம்பிக்கையின் அதிசய அடையாளம் என்பதை இந்தப் பெயர் குறிப்பிடுகிறது. கடவுளின் நம்பிக்கையை பெற்றவர் என்பதை குறிப்பிடுகிறது.
தாக்ஷ்
தாக்ஷ் என்றால், எதையும் செய்யும் திறமை கொண்டவன் என்று பொருள். பிரம்மாவின் மகன் என்ற மற்றொரு பொருளும் உண்டு. பலம் மற்றும் திறனின் அதிசயம் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
ஜேசன்
ஜேசன் என்றால் காப்பாற்றுபவர் என்று பொருள். அதாவது காயங்களை ஆற்றுபவர் அல்லது மீட்கும் அதிசயத்தை செய்யக்கூடியவர் என்ற அர்த்தத்தை தரும். எனவே உங்கள் குழந்தைக்கு இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும்.
பொதுவாகவே உங்கள் காயங்களை ஆற்றுபவர்களாகவும், உங்களை சோகங்களில் இருந்து மீட்பவர்களாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள். எனவே இந்தப்பெயர் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ள ஒரு பெயராக இருக்கும்.
கியான்
கியான் என்றால் கடவுளின் கருணை என்று பொருள். இது தெய்வீக சக்திக்கு விருப்பமானவர், கருணையின் அதிசயம் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. இந்தப் பெயரை சூட்டினால் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு தனித்தன்மையையும், அவர்களின் எதிர்காலத்துக்கு வளம் சேர்ப்பதாகவும் உள்ளது.
உங்கள் வீட்டு இளவரசன் மற்றும் இளவரசிக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை சூட்டி மகிழுங்கள். மேலும் பல அர்த்தங்கள் நிறைந்த, தமிழின் அனைத்து எழுத்துக்களிலும் உள்ள பொருள் நிறைந்த பெயர்கள் ஹெச்.டி. தமிழ் உங்களுக்காக தொகுத்து தருகிறது. மேலும் தெரிந்துகொள்ள ஹெச்.டி. தமிழுடன் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்