Boy Baby Names : ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்க அழகான பெயர்கள்! உங்கள் செல்ல மகனை இப்படி அழையுங்கள்!
Boy Baby Names : ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்க அழகான பெயர்களை இங்கு தொகுத்துள்ளோம். உங்கள் செல்ல மகனை நீங்கள் இப்படி அழைக்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்க வைக்கப்படும் அழகான பெயர்களை பாருங்கள்.
ஆகஸ்ட் மாதம் என்பது அதிகம் கடவுளை வழிபடும் மாதமாக தமிழர்களுக்கு உள்ளது. ஆடி மாதமும், ஆவணி மாதமும் சேர்ந்த மாதம் ஆகஸ்ட் மாதம். இந்த மாதம் சிவனுக்கு உகந்த மாதமாக இருக்கும் என்பதால், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிவனின் பெயர் வைக்கப்படுகிறது.
ஆதிதேவ்
ஆதிதேவ் என்றால் முதல் கடவுள் என்று பொருள் அல்லது முதன்மை கடவுள் என்று பொருள். சமஸ்கிருதத்தில், இதற்கு, தலைமைப்பண்பு கொண்டவர் மற்றும் முக்கியத்துவமானவர் என்று பொருள்.
அபய்
அபய் என்றால் அச்சமில்லாதவன் அல்லது துணிவானவன் என்று பொருள். இந்த பெயரை வைக்கும் குழந்தைகள் தைரியசாலிகளாக இருப்பார்கள் என்று பொருள். எனவே தைரியமும், பலமும் வாய்ந்த குழந்தைகளை நீங்கள் வளர்த்து எடுக்க வேண்டுமெனில் இந்தப் பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வையுங்கள்.
ஆத்யுதா
ஆத்யுதா என்றால் மிகத்துணிவானவர், அதிக தைரியம் நிறைந்தவர் என்று பொருள். இறைவன் சிவன் இப்படிப்பட்டவர்தான். அதனால் இந்தப் பெயரை வைக்கும் குழந்தைகளும், அச்சமின்றி, துணிவுமிக்கவர்களான இருப்பார்கள்.
அனிருத்தா
அனிருத்தா என்றால் தடையற்றவர் அல்லது தடையில்லாதவர் என்று பொருள். இந்தப்பெயரை வைத்தால் உங்கள் குழந்தைகள் எந்நவித தடையையும் கடந்து வருவார்கள் என்று அர்த்தம். எனவே உங்கள் ஆண் குழந்தைகள் அச்சமின்றி வளர விரும்பினால் அவர்களுக்கு இந்த பெயரை வைக்கவேண்டும்.
அதர்வன்
அதர்வன் என்றால், ஞானி அல்லது குரு என்று பொருள். வேத சாஸ்திரத்தில் இந்தப்பெயர் ஞானம் மற்றும் அறிவில் சிறந்து விளங்குபவர்களுக்கு வைக்கப்படுகிறது.
தேவாங்க்
தேவாங்க் என்றால், கடவுளின் அங்கம் என்று பொருள். கடவுளைச் சார்ந்தவர் என்று பொருள். தெய்வீகமானவர் ஒழுக்கமுள்ளவர் என்று பொருள். இந்த பெயரை வைக்கும் குழந்தைகள் மிகுந்த அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.
ஜீவிதேஷ்
கடவுளின் வாழ்க்கை என்று இந்த பெயருக்கு அர்த்தம் கூறப்படுகிறது. பிழைத்திருத்தலில் வல்லவர் என்றும் இதற்கு மற்றொரு அர்த்தம் உள்ளது. ஒருவரின் வாழ்வில் அதிகம் சிறப்புக்களை கொண்டவர் என்பது இதற்கு பொருள்.
யுகாதியாக்ஷ்
இந்த காலத்தின் தலைவன் என்று பொருள். யுகாதியாக்ஷ என்றால். கட்டுப்படுத்துபவர். வழிகாட்டி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்ற பொருளை தரும்.
விரிசாக்
விரிசாக் என்றால், வலுவான மற்றும் சக்தி வாய்ந்த என்று பொருள். இது ஒருவரின் உடல் வலிமை, ஆற்றல் மற்றும் அவர்கள் மீண்டெழும் திறன் ஆகிய அனைத்தையும் குறிக்கிறது.
த்ரையாக்ஷ்
முக்கண்ணன் என்பதை குறிக்கிறது. இது பாரம்பரியமாக இறைவன் சிவனுடன் தொடர்புடையது. இது ஆன்மீக ஒளி மற்றும் ஆன்மீக கோணத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்.
மிஹிரன்
மிஹிரன் என்றால் சூரியனைப் போன்றவர் என்று பொருள். சூரியனைப்போன்ற பிரகாசமான, சூடான, ஒளியை பரப்பக்கூடிய, சக்திவாய்ந்த நபர் என்பது இதற்கு பொருள்.
விதார்த்
விதார்த் என்றால், ஒருவரின் சிறப்பான செல்வம் என்று பொருள் அல்லது அதிர்ஷ்டத்தை கொண்டுவருபவர் என்று பொருள். உங்கள் குழந்தைகள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை கொண்டு வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தபெயரை வைப்பது பொருத்தமாக இருக்கும்.
நிஹான்த்ரா
நிஹான்த்ரா என்றால், அழிக்கும் கடவுள் என்று பொருள். இவர் கடும் சீற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். தீர்க்கமான நபர்களாக இருப்பார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்