Boy Baby Names : நிலவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ பாருங்கள்!-boy baby names can you name your baby boys on rent from nila look here - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : நிலவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ பாருங்கள்!

Boy Baby Names : நிலவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2024 02:00 PM IST

Boy Baby Names : நிலாவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

Boy Baby Names : நிலாவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ பாருங்கள்!
Boy Baby Names : நிலாவிடம் வாடகை வாங்கி உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? இதோ பாருங்கள்!

அக்காய்

அக்காய் என்பது துருக்கியை தோற்றமாகக்கொண்ட மிகவும் ஸ்டைலான பெயர். இதற்கு மின்னும் நிலா என்று பொருள். இது நிலவின் ஒளிரும் தன்மையைக் குறிப்பிடுகிறது. இது உங்கள் குட்டி குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்.

அய்னார்

அய்னார் என்பது நிலவிடம் இருந்து பெறப்பட்ட ஆண் குழந்தைக்கான பெயர். இதற்கு வானில் உள்ள நிலவின் பல ஆண்டுகளாக கவர்ந்திழுக்கும் தன்மையைக் குறிக்கிறது. நிலவின் ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும், மர்மங்ளையும் குறிக்கும் பெயர் ஆகும்.

அல்டிரின்

அல்டிரின் என்பது முதலில் நிலவில் நடந்த ஆராய்ச்சியாளரின் நினைவாகப் பெறப்பட்ட பெயர். 1969ம் ஆண்டு முதலில் நிலவில் இறங்கி நடந்தவர் பஸ் அல்டிரின் ஆவார். இது வலுவான வரலாறு கொண்ட பெயர். இது நேரடியாக நிலவுடன் தொடர்பு கொண்ட பெயராகும்.

ஆர்ச்சி

ஆர்ச்சி என்றால், ஜீபிடர் கிரகத்தில் உள்ள நிலவின் பெயர். இது தனித்தன்மையான வானுலக தொடர்பைக் குறிக்கிறது. இந்த உலகில் உங்கள் குழந்தைகள் எண்ணற்ற ஆச்சர்யங்களை நிகழ்த்துவார் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

ஜெரா

ஜெரா என்றால் நிலவின் மாதத்தை குறிப்பிடுகிறது. அது உங்கள் குழந்தை மிகவும் சிறப்பான பெயராகும். இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வைத்தால் அவர்கள் இயற்கையுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். நிலவின் நாயகனாகவும் இருப்பார்கள்.

சிரா

சிரா என்பது ஆப்ரிக்க தோற்றத்தைக் கொண்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் நிலவொளி, இந்தப் பெயர் மிருதுவான ஒளிரும் தன்மை கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. நிலவு தரும் ஒளி, நம்பிக்கை, இதம் ஆகியவற்றைக் குறிக்கும்.

ஈஹான்

ஈஹான், என்பது அரபிக் பெயர். இதற்கு முழு நிலவு என்று பொருள். இந்தப் பெயர் முழு நிலவின் முழுமை மற்றும் ஞானம் ஆகியவற்றை குறிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொண்டுவந்த உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராக இருக்கும்.

சூனெயிர்

சூனெயில் என்பது இஸ்லாமிய தோற்றத்தைக் கொண்ட பெயர். இதற்கு நிலவின் ஒளி என்று பொருள். இது உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சிறப்பான தேர்வு ஆகும். உங்கள் உலகில் ஒளியேற்றிவர் என்று பொருள். இரவின் இருளுக்கு நிலவு எப்படி ஒளியேற்றுகிறதோ அதைப்போன்றவர் என்று பொருள்.

நீல்

நீல், என்றால் நிலவு என்று பொருள். நிலவில் முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங், என்பதால், இந்தப்பெயருக்கு நிலவுடன் ஏகப்பட்ட பாரம்பரிய தொடர்பு உள்ளது.

அஸ்டின்

அஸ்டின் என்றால், நட்சத்திரத்தைப் போன்றவர் என்று பொருள். இது நட்சத்திரங்களுடன் தொடர்பு கொண்டவர் என்பதைக் குறிக்கும். இது வானியல் கருப்பொருளைக் கொண்டது. உங்கள் குழந்தை இரவு வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போல் வாழ்வில் ஜொலிப்பார்கள் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.