Boy Baby Names begins in ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன!-boy baby names begins in v beautiful baby boy names starting with the letter v are given here - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names Begins In ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன!

Boy Baby Names begins in ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன!

Priyadarshini R HT Tamil
Aug 09, 2024 01:25 PM IST

Boy Baby Names begins in ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டி மகிழுங்கள்.

Boy Baby Names begins in ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன!
Boy Baby Names begins in ‘V’ : ‘வ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். 

அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

ஆண் குழந்தையின் பெயர்கள்

உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு இங்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘வி’ என்ற எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்களை அதன் அர்த்தத்தோடு இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். எனவே நீங்கள் இந்தப் பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாசு

வாசு என்ற பெயரைக் கேட்டவுடனே உங்களுக்கு இது புரானக்கதையுடன் தொடர்புடைய பெயர் என்று தெரிந்திருக்கும். வாசுதேவன் என்பது கிருஷ்ண பகவானுக்கு உள்ள பல பெயர்களுள் ஒன்று. இதற்கு அர்த்தம் ‘இருப்பிடம் வழங்குபவர்’ என்று பொருள். எனவே இந்தப் பெயரை உங்கள் ஆண் குழந்தைக்கு சூட்டும்போது, அது உங்களுக்கு ஒரு ஆன்மீக தொடர்பை ஏற்படுத்தும். பழைய பெயர்தான். ஆனாலும் நல்ல பெயர்.

வியான்

வியான் என்றால் ‘கலைஞன்’ அல்லது ‘சிறப்பான அறிவு உடையவன்’ என்று பொருள். உங்கள் குழந்தைகள் கிரியேட்டிவிட்டியிலும், அறிவில் சிறந்து விளங்கவேண்டும் என்று விரும்புபவர்கள், உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயரை வைக்கவேண்டும். இது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் பெயர் ஆகும்.

விஹான்

விஹான் என்ற பெயர் சமஸ்கிருத பெயர் ஆகும். விஹான் என்றால் ‘விடியல்’ என்று பொருள். இந்த பெயருக்கு புதிய துவக்கத்தை குறிப்பது என்று பொருள் இது அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துத்து உறுதியளிக்கும்.

வேதான்ஷ்

வேதான்ஷ் என்பதற்கு ‘வேதத்தின் அங்கம்’ என்பது பொருள். இந்த பெயர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஏற்ற பெயர் ஆகும். வேத புத்தகங்களில் உள்ள ஆன்மீக சிறப்பை குறிக்கும் பெயர் ஆகும்.

வாரன்யா

வாரன்யா என்றால், ‘மிகவும் உயர்ந்தது’ என்று கருதப்படுகிறது அல்லது ‘சிறப்பு’ என்ற பொருளையும் தருகிறது. தங்கள் குழந்தைகள் சிறப்படையும், புகழை அடையவும் விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்தப் பெயரை சூட்டினால். அது அவர்களுக்கு மேலும் பலம் கொடுப்பதாக இருக்கும்.

வியோம்

வியோம் என்றால் ‘வானம்’ என்று பொருள் தரும். இந்த பெயருக்கு சுதந்திரம் மற்றும் எல்லையில்லா திறன் என்று பொருள். சிறப்பான உயரங்களை உங்கள் குழந்தைகள் தொட விரும்பினால் அவர்களுக்கு இந்தப் பெயரை சூட்டி மகிழுங்கள்.

வர்தன்

வர்தன் என்றால் ’ஆசிர்வாதம்’ என்று பொருள், இது சிவனின் பெயரும் ஆகும். இந்த பெயர் கடவுளின் ஆசிரிவாதம் நிரம்பப்பெற்றது. இது உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு சிறந்தது.

விஷிருத்

விஷ்ருத் என்றால் ‘பரிச்சயமான’ அல்லது ‘கொண்டாடப்படும்’ என்று பொருள். உங்கள் குழந்தைக்கு புகழும், மரியாதையும் கிடைக்க விரும்பினால், உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயரை சூட்டலாம்.

வித்யூத்

வித்யூத் என்றால், ’வெளிச்சம்’ அல்லது ‘ஃப்ளாஷ்’ என்று பொருள். இந்த துடிப்பான பெயர், ஆற்றல் நிறைந்த மற்றும் வாழ்வியல் அடையாளம் கொண்ட குழந்தை என்று பொருள். இந்த குழந்தை உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வருகிறார் என்று அர்த்தம்.

வேதார்த்

வேதார்த் என்றால் ’வேதங்களின் சாரம்’ என்று பொருள். இந்தப் பெயர், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற பெயர். ஆழ்ந்த மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை உங்கள் குழந்தைகள் வாழ் விரும்பினால் அவர்களுக்கு இந்தப்பெயரை வைத்து மகிழலாம்.

வியாஸ்

வியாஸ், என்பது வியாச முனிவர் என்ற முனிவரின் பெயர். இவர் மகாபாரதத்தை இயற்றியவர். இந்த பெயர் ஞானத்தை குறிக்கிறது. உங்கள் குழந்தைகள் அறிவாளிகளாக விரும்பினால் உங்கள் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டி மகிழுங்கள்.

வர்ஷித்

வர்ஷித் என்றால் ‘மழை’ அல்லது ’பலம்’ என்று பொருள். இந்த பெயர், வலிமை, எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது இந்தக் குழந்தை என்பதைக் குறைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.