Bottle Gourd Kadayal : சுரைக்காய் கடையல்! காயே வேண்டாம் என்று கூறுபவர்கள் கூட விரும்புவார்கள்!
Bottle Gourd Kadayal : சுரைக்காய் கடையலை இப்படி செய்து பாருங்கள் காயே வேண்டாம் என்று கூறுபவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

சாதம் மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் காயே வேண்டாம் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுங்கள். கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 1 (தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 2 அல்லது 4 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவேண்டும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 3 (அரைத்தது)
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்
மல்லித் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், அதில் பெரிய வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
கடைசியாக சுரைக்காயை சேர்க்கவேண்டும். நன்றாக கிளறிவிட்டு, போதிய அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை விடவேண்டும். விசில் நின்றதும், திறந்து ஒரு மத்து வைத்து நன்றாக காயே தெரியாத அளவுக்கு கடைந்துவிடவேண்டும்.
கடைந்து விட்டு, மல்லித்தழை தூவி பரிமாறினால் போதும். சூப்பர் சுவையில், சுரைக்காய் கடையல் தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் வறுவல் அல்லது பொரியல் நன்றாக இருக்கும்.
சுரைக்காயின் நன்மைகள்
நீர்ச்சத்துக்கள் நிறைந்தது
சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு காய். அது உங்கள் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்வதுடன், உங்களின் தாகத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் உள்ள இந்த காய் உங்கள் உடலுக்கு கோடை காலத்திற்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலுக்கு நல்லது.
கலோரிகள் குறைவாக இருந்தாலும், உங்கள் உடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகிய மினரல்கள் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் பி ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
உடலுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது
சுரைக்காய் உடலுக்கு செரிமானத்தை அளிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள உயர் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உடலில் செரிமானத்தை ஏற்படுத்துகிறது. குடல் நுண்ணுயிர்களை காக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
குளிர்ச்சியை அதிகரிக்கும்
உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடிய உணவுகளுள் சுரைக்காயும் ஒன்று. இது உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. இது உடலில் பித்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன், கோடை வெப்பத்தை எதிர்த்து போராடுகிறது.
இதய ஆரோக்கியம்
சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
ரத்த அழுத்த முறைபாடு
சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடல் எடை கட்டுப்பாடு
சுரைக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. இதனால், தேவையற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. உடலில் கலோரிகளை குறைத்து, உடல் வளர்சிதையை பராமரிக்கிறது.
கழிவுநீக்கம்
சுரைக்காய் இயற்கை கழிவு நீக்கி, உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் தொற்றுகள் மற்றும் நோய்ளுக்கு எதிராக போராடுவதை உறுதிசெய்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.

டாபிக்ஸ்