சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…
சுரைக்காய் சட்னி : எனவே அதற்கு நீங்கள் இதுபோல் துவையல் அரைத்துக்கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த துவையலை நீங்கள் சாதம் மற்றும் இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும். இந்த சுரைக்காய் சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

சுரைக்காய் சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. அந்தக்காயில் எது செய்தாலும் சாப்பிட மாட்டார்கள். குழந்தைகளுக்கு சுரைக்காயெல்லாம் அறவே பிடிக்காத காய். வறுவல் காய்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய். அதை நாம் அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும். எனவே அதற்கு நீங்கள் இதுபோல் துவையல் அரைத்துக்கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த துவையலை நீங்கள் சாதம் மற்றும் இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும். இந்த சுரைக்காய் சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• சுரைக்காய் – 2 கப்
• தக்காளி – 2 (மிதமான அளவு)
• உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• உளுந்து – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• வர மிளகாய் – 1
சட்னிக்கான மசாலா
• எண்ணெய் – 2 ஸ்பூன்
• கடலை பருப்பு – 2 ஸ்பூன்
• உளுந்து – 2 ஸ்பூன்
• வர மிளகாய் – 2
• இஞ்சி – ஒரு சிறிய துண்டு
• பச்சை மிளகாய் – 1
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து பொரிய விடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிய விடவேண்டும். இந்த தாளிப்பை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன் கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.
3. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும். காய் நன்றாக வேக வேண்டும். கிட்டத்தட்ட 5 முதல் 10 நிமிடங்கள் வதக்கவேண்டும்.
4. அடுத்து தக்காளியை சேரத்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும். சுரைக்காய் நன்றாக வெந்து வரும் அளவுக்கு வேகவைக்கவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஆறவிடவேண்டும்.
5. அனைத்தும் ஆறியவுடன், சுரைக்காய் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மசாலாக்களையும் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் வழித்துக்கொள்ளவேண்டும்.
6. அடுத்து தாளிப்பை அதில் சேர்க்கவேண்டும். கலந்து விட்டால் சூப்பர் சுவையான சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம். சாப்பாட்டுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இந்த சட்னியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்