தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Bottle Gourd Adai You Can Also Make Adai In Gourd What A Delicious Climax

Bottle Gourd adai : சுரைக்காயில் கூட செய்யலாம் அடை! அடடே என்ன சுவை என்று உச்சுக்கொட்ட வைக்கும்!

Priyadarshini R HT Tamil
Mar 09, 2024 08:00 AM IST

Bottle gourd adai : சுரைக்காயில் அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Bottle Gourd adai : சுரைக்காயில் கூட செய்யலாம் அடை! அடடே என்ன சுவை என்று உச்சுக்கொட்ட வைக்கும்!
Bottle Gourd adai : சுரைக்காயில் கூட செய்யலாம் அடை! அடடே என்ன சுவை என்று உச்சுக்கொட்ட வைக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடலைப்பருப்பு – முக்கால் கப்

துவரம்பருப்பு – கால் கப்

உளுத்தம்பருப்பு – கால் கப்

சுரைக்காய் – 1 சிறியது

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

வர மிளகாய் – 10

பச்சை மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் அளந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின் தண்ணீரில் 3 முறை கழுவிக்கொள்ளவேண்டும். பின் 5 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

சுரைக்காயின் தோலை சீவி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்துவிடவேண்டும். பின் மெலிதாக துருவிக்கொள்ளவண்டும்.

ஊறவைத்தவற்றை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின் 2 கப் தண்ணீர் சேர்த்து அலசி மாவில் கலந்து கொள்ளவேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம், துருவிய சுரைக்காய், தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

இரும்பு தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து பொறுமையாக தேய்த்து விடவேண்டும். தேங்காய் எண்ணெயை சுற்றிலும் ஊற்றி வேகவிடவேண்டும்.

அடிப்பகுதி நன்றாக முறுகலானதும், திருப்பிப் போட்டு மேலும் 2 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவேண்டும். சூடாக பரிமாற சுவை அள்ளும்.

இதற்கு தொட்டுக்கொள்ள அவியல் நன்றாக இருக்கும். இதனுடன் சர்க்கரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை வைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எந்த வகை சட்னி வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

அடை செய்யும்போது பொறுமை மிகவும் அவசியம். மிதமான தீயில் அடைகளை வேகவைத்து எடுக்கும்போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். அடை சாப்பிடும்போது பொறுமையாக மென்று ரசித்து, ருசித்து சாப்பிட சுவை அள்ளும்.

நன்றி – விருந்தோம்பல்.

சுரைக்காய் நீர்ச்சத்து நிறைந்த காயாகும். சுரைக்காய் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது என்பதால் வெயில் காலத்துக்கு கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகளுள் ஒன்றாக உள்ளது. வெயில் காலத்தில் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது கட்டாயம்.

அதனால் அதை கூட்டு, பொரியல் என்று சமைத்து சாப்பிடாமல் இதுபோல் அடை செய்து சாப்பிட சுவை அள்ளும். பொதுவாக குழந்தைகள், சுரைக்காய் போன்ற காய்களை அதிகம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதுபோல் அடையாக செய்து சுரைக்காய் உள்ளது என்று தெரியாமலே கொடுத்துவிடலாம்.

சுரைக்காய் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் தேவையற்ற நீர் சேர்ந்து கால்களில் வீக்கம் ஏற்படும், அதுபோன்ற நேரத்தில் பெண்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அது உடலில் சேரும் தேவையற்ற நீரை வெளியேற்றி, உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும். எனவே கர்ப்பிணிகளும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காயாக சுரைக்காய் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்