Blurred Vision Home Remedy : கண் புரை நோய் மற்றும் மங்கலான பார்வையால் அவதியா? இதோ காலை உணவுக்குப்பின் இந்த ஒரு பானம்!
Blurred Vision Home Remedy : கண் புரை நோய் மற்றும் மங்கலான பார்வையால் அவதியா? இதோ காலை உணவுக்குப்பின் இந்த ஒரு பானம்!
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நீங்கள் கண்புரை, மங்கலான பார்வை மற்றும் நினைவுவைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறதா? விஷயங்களை மறந்து விடுகிறீர்களா? இருட்டில் பார்க்க முடியவில்லையா? எப்போதும் கண்ணாடியுடன் வலம் வருகிறீர்களா?
உங்களுக்கு இந்த ஒரு பானம் மட்டும் போதும். இதை நீங்கள் தினமும் இருவேளை ஒரு வாரம் பருகவேண்டும். ஆனால் கண் பார்வை விஷயத்தில் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியம் கொள்ளக்கூடாது. தீவிரமான பிரச்னைகள் எனில், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
தேவையான பொருட்கள்
கேரட் – 1
(கேரட் மூளையின் செல்களை தூண்டி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் உட்பொருட்கள், மினரல்கள் ஆகிய அனைத்தும் உடலின் நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் கொடுக்கின்றன.
இவை புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன. கண்புரை நோய், இதயநோய்கள் மாக்குலர் டிஜெனரேசன் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. அதற்கு இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காரணமாகின்றன)
எலுமிச்சை – 1
(மேலும் நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் ஆன்டிவைரல் ஃபார்முலா புற்றுநோயை தடுக்கிறது)
எலுமிச்சை மற்றும் கேரட் இரண்டும், உயிரினங்களுக்கு சிறந்தது. இவை உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்கள் கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.
செய்முறை
கேரட் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் வெட்டி, 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது 100 மில்லி லிட்டராக சுண்டும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் அதை வடிகட்டி காலை உணவுக்குப்பின்னர் அருந்த வேண்டும்.
கேரட்டின் தோலை சீவியும் சேர்க்கலாம் அல்லது கேரட்மை அப்படியேவும் சேர்க்கலாம். பின்னர் 8 மணி நேரம் கழித்து மீண்டும் இந்த பானத்தை தயாரித்து பருகவேண்டும். இதை ஒரு வாரம் செய்தால், உங்களுக்கு கண்புரை இருந்தாலோ அல்லது மங்கலான பார்வை இருந்தாலோத அதை சரிசெய்துவிடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்