தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Blood Pressure How To Keep Your Bp Under Control Follow These Simple Steps And Reap The Benefits

Blood Pressure : உங்கள் பிபியை கட்டுக்குள் வைப்பது எப்படி? இதோ இந்த எளிய வழிகளை பின்பற்றி பலன் பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 23, 2024 05:15 PM IST

Blood Pressure : உங்கள் பிபியை கட்டுக்குள் வைப்பது எப்படி? இதோ இந்த எளிய வழிகளை பின்பற்றி பலன் பெறுங்கள்!

Blood Pressure : உங்கள் பிபியை கட்டுக்குள் வைப்பது எப்படி? இதோ இந்த எளிய வழிகளை பின்பற்றி பலன் பெறுங்கள்!
Blood Pressure : உங்கள் பிபியை கட்டுக்குள் வைப்பது எப்படி? இதோ இந்த எளிய வழிகளை பின்பற்றி பலன் பெறுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பிரச்னைதகள் மாரடைப்புகள், பக்கவாதங்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நம்மால் முடியும். இதனால் நம் இதய ஆரோக்கியத்தையும் பேணலாம்.

சரிவிகித மற்றும் உப்பு குறைந்த உணவுகள்

உங்கள் தட்டைவிட ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்று இல்லை. அது உங்கள் உயர் ரத்த அழுத்ததை எதிர்த்து போராடுகிறது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதச்சத்து உணவுகள் என உங்கள் உணவை தேர்ந்தெடுங்கள். உங்கள் உப்பு உபயோகத்தில் கட்டாயம் ஒரு கண் வையுங்கள். 

அதிகளவில் சோடியம் உள்ளே செல்லும்போதும் ரத்த அழுத்தம் உயரும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, ஃபிரஷாக கிடைக்கும் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மூலிகைகளை சுவை பார்க்காமல் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயப்பதாக கருதி எடுத்துக்கொள்ளுங்கள்.

மதுவை குறையுங்கள்

எப்போதாவது மது அருந்தி மகிழலாம். ஆனால் அதிகப்படியாக மது அருந்துவது உங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். எனவே குறைவானது முதல் மிதமானது வரை மது எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அளவை தாண்டி விடாதீர்கள். 

ஆண்கள் என்றால் 120 மில்லி லிட்டர், பெண்கள் என்றால் 60 மில்லி லிட்டர் எடுத்துக்கொள்ளலாம். ஆண்கள் மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இது இதய ஆரோக்கியத்துக்கு மட்டும் நல்லதல்ல, ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவுகிறது.

உடற்பயிற்சி கட்டாயம்

உடற்பயிற்சி என்பது கட்டாயமான ஒன்று. அது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கிமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. 

ஆழமான உடற்பயிற்சிகளை வாரத்தில் 150 நிமிடங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். வேக நடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த பயிற்சிகளையெல்லாம், நீங்கள் விரும்பி செய்வதை பழக்கமாகக்கொள்ளுங்கள்.

மனஅழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அது மனஅழுத்தத்தை பராமரிப்பது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உங்களை அமைதியாக வைத்திருக்கும் நுட்பங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்து சுவாசிப்பது, தியானம், யோகா ஆகியவற்றை உங்கள் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

தினமும் இவற்றை கட்டாயம் பழகுங்கள். இடையிடையே இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். ஹாபிகளை வளர்த்துதக்கொள்ளுங்கள். சமுதாயத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். இவையெல்லாம், மனஅழுத்த அளவை குறைக்கும் வழிகள். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்

அதிக உடல் எடை இதயத்தில், அழுத்தத்தை கொடுக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதற்கு உங்களுக்கு சரிவிகித உணவு கட்டாயம் தேவை. 

அதனுடன் உடற்பயிற்சிகளும் தேவை. சிறிய மற்றும் நிலையான மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் கட்டாயம் நல்ல பலனைத்தரும். அது உங்கள் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கும். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்

சிலருக்கு வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் போதாது. மருந்தின் தேவையும் இருக்கும். எனவே மருதுதுவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவு மருந்தை பரிந்துரைத்த காலஅளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

முறையான மருத்துவ பரிசோதனைகள், திறந்த உரையாடலை உங்கள் மருத்துவரிடம் செய்து உங்கள் பிரச்னைகளை விரிவாக எடுத்துக்கூறி, உங்கள் சிகிச்சை திட்டம் நன்றாக செயல்பட ஒத்துழைப்பு கொடுங்கள். உங்களின் குறிப்பிட்ட தேவைக்கும் நீங்கள் அறிவுரைகளை பெறவேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்