ரத்த அழுத்தம் : உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரத்த அழுத்தம் : உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள்!

ரத்த அழுத்தம் : உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 24, 2025 10:50 AM IST

உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் ரத்த அழுத்தத்தை நீங்கள் சீராக பராமரிக்க உதவும்.

ரத்த அழுத்தம் : உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள்!
ரத்த அழுத்தம் : உங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள்!

வாழைப்பழம்

வாழைப்பழம் என்பது உங்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியது. இதை நீங்கள் ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் உள்ளது. இது உங்கள் உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிகப்படியான சோடியச் சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுகள் அந்த விளைவை எதிர்க்க உதவும்.

கீரைகள்

கீரைகள், காலே, கொலார்ட் மற்றும் ஸ்விஸ் சார்ட் போன்ற கீரைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டும் உதவவில்லை. இவை உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் சோடியச் சத்துக்கள் குறைவு. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம். இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை நீங்கள் சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். பூண்டுடன் சேர்த்து வதக்கியும், ஸமூத்தியில் சேர்த்து அடித்தும் சாப்பிடலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இயற்கை நைட்ரேட்கள் உள்ளது. இது உங்கள் ரத்த நாளங்களை திறக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகும்போது அல்லது வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடும்போது, அது உங்கள் ரத்த அழுத்தத்தில் சில மணி நேரங்கள் நேர்மறை பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ஓட்ஸ்

உங்கள் நாளை ஓட்சுடன் நீங்கள் துவங்கும்போது, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும் தரும். ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் என்ற நார்ச்சத்து, உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பெரிகள்

ப்ளூ பெரிகள், ஸ்ட்ரா பெரிகள் மற்றும் ராஷ் பெரிகள் என அனைத்திலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை ஃப்ளாவனாய்ட்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உட்பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பவையாகும். இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் காலை உணவு அல்லது ஸ்மூத்திகள் அல்லது இனிப்புகளுடன் சேர்த்து பெரிகளை சாப்பிட்டு மகிழலாம்.

ஃபேட்டி ஃபிஷ்

சால்மன், மத்தி, கெளுத்தி ஆகிய மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை இந்த மீன்களை சேர்ப்பதை உறுதிப்படுத்துங்கள். கிரில், பேக், வறுவல், குழம்பு என சுவையான வழிகளில் தயாரித்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பூண்டு

பூண்டில் சுவைக்கானது மட்டுமல்ல, அதில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. இதில் உள்ள அலிசின் என்ற உட்பொருள், பூண்டுக்கு அதன் மணத்தைக் கொடுக்கிறது. இது உங்கள் ரத்த நாளங்களை அமைதிப்படுத்துதி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதை சமைத்து அல்லது பச்சையாக என எப்படி சாப்பிட்டாலும் அது இதயத்துக்கு நல்லது. இதை நீங்கள் அன்றாடம் பெரும்பாலான உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

டார்க் சாக்லேட்

70 சதவீத டார்க் சாக்லேட், உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவும். இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள், ரத்த நாளங்களுக்க உதவும். ரத்த அழுத்ததைக் குறைக்கும். ஆனால் இதை மிதமான அளவு மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

யோகர்ட்

கொழுப்பு குறைந்த அல்லது கிரீக் யோகர்ட் என எதுவாக இருந்தாலும், அதில் கால்சியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இவையிரண்டும் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இனிப்பில்லாத யோகர்ட் நல்லது. இதை நீங்கள் பழங்களில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தேன் தூவி சாப்பிடலாம்.

மாதுளை

மாதுளையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதை நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை சர்க்கரையில்லாத சாறாகவோ அல்லது பழமாகவோ சாப்பிடலாம். யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். இவையெல்லாம் உங்கள் இதயத்தை பாதுகாக்கும் சுவையான வழிகள் ஆகும்.