ரத்தப்பொரியல்; சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு கூட பிடிக்கும்; அசத்தலான சுவை தரும்! இதோ ரெசிபி!
ரத்தப்பொரியல் செய்வது எப்படி என்றும், மழைக்கு இதமாக கசாயம் செய்வது எப்படி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
ஆட்டு ரத்தம்
(இதை கடையில் இருந்து வாங்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ரத்தம் சிறிது நேரத்தில் உறைந்துவிடும். அதை பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்)
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள ரத்தப்பொரியலை சேர்த்தால், சூப்பர் சுவையான ரத்தப்பொரியல் தயார்.
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது விருந்துகளில் பரிமாறலாம் அல்லது சாப்பாட்டுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இது சூப்பர் சுவையாக இருக்கும். ரத்தப்பொரியல் அனைவருக்கும் பிடிக்காது. ஆனால் இதுபோல் செய்துகொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ரத்தத்தை கடையில் வாங்கிக்கொள்ளவேண்டும். ஆட்டின் ரத்தம் சாப்பிடும்போது, நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அது கொடுக்கிறது.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். அத்தனை சுவையானது ஆட்டின் ரத்த பொரியல்.
மேலும் ஒரு ரெசிபியைத் தெரிந்துகொள்ளுங்கள்
இந்த பானம் உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலைத் தரக்கூடியது. உங்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
மழைக்காலத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுநோய்களை துரத்தியடிக்கும் பானம். இதை தினமும் பருகி உங்களை நோய் அண்டவிடாமல் காத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி – 20 கிராம்
வெற்றிலை – 4
செய்முறை
மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், இஞ்சி, வெற்றிலை என அனைத்தையும் உரலில் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரை லிட்டர் தண்ணீரில் அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கக்கூடாது. தண்ணீர் மற்றும் இடித்த பொருட்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
அரை லிட்டர் தண்ணீர் பாதியாக கொதித்து சுண்டி வரவேண்டும். 250 மில்லி லிட்டர் தண்ணீர் வந்தவுடன், அதை வடிகட்டி பருகவேண்டும். பெரியவர்கள் 60 முதல் 80 மில்லி லிட்டர் வரையும், சிறியவர்கள் 30 முதல் 50 மில்லி லிட்டர் வரையும் பருகலாம்.
தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. எனவே இந்த பானத்தை நீங்கள் வாரத்தில் இருமுறை உங்களுக்கு உடலில் எந்த உபாதைகளும் இல்லாதபோதும் பருகவேண்டும்.
அப்போதுதான் நீங்கள் மழையில் வெளியே சென்றுவிட்டு வரும்போது எவ்வித தொற்றுகளும் உங்களுக்கு ஏற்படாது. உங்களுக்கு தொற்றுகள் உள்ள நாளில் இதை ஒரு வாரம் தினமும் காலை மாலை இருவேளையும் பருகவேண்டும்.
வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் மருந்துகளுடன் இதுவும் சேர்த்து உங்களின் நோய்களை விரைவில் விரட்டியடிக்கும். இதை மிதமான சூட்டில் பருகவேண்டும் என்பதால், காய்ச்சி வைத்துவிடக்கூடாது. தேவைப்படும்போது செய்து கொள்ளவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்