ரத்த குழாய் அடைப்பு : ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் காய்கறிகள் எவை? டாக்டர் சொல்றத கேளுங்க!
ரத்த குழாய் அடைப்பு : ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் காய்கறிகள் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். அது என்ன காய்கறிகள் என்னவென்று தெரிந்துகொண்டு சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ரத்த குழாய்களில் சென்று அடைத்துக்கொள்ளும். இதனால் நமக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தடுக்க வேண்டும். அதற்கு சில காய்கறிகளே உதவுகின்றன.
டாக்டர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற சில பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் மக்களுக்கு வீட்டிலே செய்யக்கூடிய தீர்வுகளைக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தனது வீடியோவில் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் காய்கறிகள் குறித்து விளக்கியுள்ளார். அது என்னவென்று பாருங்கள்
இதுகுறித்து மருத்துவர் பிள்ளை கூறியுள்ள விவரங்கள்
நாம் சாப்பிடும் உணவே மருந்துதான். உணவு ஏற்படுத்திய அடைப்பையும் அந்த உணவுதான் சரிசெய்யப்போகிறது. அதற்கு 5 காய்கறிகள் உதவும். இதை நீங்கள் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டு வந்தால், அது உங்கள் ரத்த குழாய்களில் உள்ள சிறிய அடைப்புக்களை நீக்கும். மேலும் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
தக்காளி
தக்காளியில் உள்ள ஐசோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நமது ரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்களை நீக்குவது மற்றும் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ்கள் அதிகம் உள்ளது. இது உடலின் உள்ளே சென்று ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள ஒருவித ஆசிட், ரத்த குழாய்களில் படிந்துள்ள அடைப்பை மெல்ல மெல்ல கரைத்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து நமது ரத்த குழாய்களை நல்ல முறையில் பாதுகாக்கிறது.
கேரட்
கேரட்டை நீங்கள் எடுத்துக்ககொள்ளும்போது அது ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புக்களை நீக்க உதவுகிறது.
கீரைகள்
கீரைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளது. அது உங்கள் ரத்தக் குழாயில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் படிவுகள் அனைத்தையும் சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை நீக்கி, நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
இவற்றை நாம் அன்றாட உணவில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளுடன் கீரைகளையும் உணவில் எடுத்துக்கொண்டு ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அவ்வப்போது சரிசெய்துகொண்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்