தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Black Urad Kanji Kanji That Boosts Libido Taste More Often And Improve Your Health

Black Urad Kanji : பாலுணர்வை அதிகரிக்கச் செய்யும் கஞ்சி! அடிக்கடி சுவைக்க ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Feb 07, 2024 10:41 AM IST

Black Urad Kanji : Kanji that boosts libido! Taste more often and improve your health!

Black Urad Kanji : பாலுணர்வை அதிகரிக்கச் செய்யும் கஞ்சி! அடிக்கடி சுவைக்க ஆரோக்கியமும் அதிகரிக்கும்!
Black Urad Kanji : பாலுணர்வை அதிகரிக்கச் செய்யும் கஞ்சி! அடிக்கடி சுவைக்க ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கருப்பு உளுந்து (உடைத்தது) – அரை கப்

கருப்பட்டி – அரை கப்

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

காய்ச்சிய பால் - 1 கப்

செய்முறை

கருப்பு உளுந்தை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி கொள்ள சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய குக்கரில் கழுவிய பருப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் 10 முதல் 15 விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும். பருப்பு பூவாக வேகவில்லை என்றால் மீண்டும் 5 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.

கருப்பட்டியை நன்றாக பொடித்து ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து கரைத்துக் கொள்ளவேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவேண்டும்.

குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவேண்டும். பின் அதில் தேங்காய் துருவல் மற்றும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டி பாகை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவேண்டும்.

கஞ்சி சிறிது ஆறியதும் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து கலந்து பரிமாறவேண்டும்.

இந்த கஞ்சியில் பால் சேர்பதற்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தலாம். அதேபோல கருப்பட்டிக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பு உளுந்தை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். ஏனென்றால் நார்ச்சத்து அதிகமான, புரதம் நிறைந்த மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ள தானியமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ரத்த சோகையை தடுக்கிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கின்போது இழந்த ரத்தத்தை ஈடு செய்ய உதவுகிறது. பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்குகிறது. பெண்கள் பூப்பெய்தும்போது ஏற்படும் அடிவயிறு வலி, கால் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.

பெண்களுக்கு இடுப்பு எலும்பு வலுப்பெற, கருப்பை வலுப்பெற உதவுகிறது. இதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது. பூப்பெய்திய பெண்கள் ஆரம்ப காலத்தில் மாதவிடாய் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சுழற்சி சரியாக இல்லாதது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை இந்த கஞ்சி தடுக்கிறது.

அதனால் பூப்பெய்திய பெண்களுக்கு இந்த கஞ்சி கட்டாயம் செய்து கொடுக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் இருவரும் பாலுணர்வை ஏற்படுத்த உதவுகிறது. நடுத்தர வயது பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கிறது. கருப்பை கோளாறுகளை தடுக்கிறது. எனவே இந்த கஞ்சியை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை டீ, காஃபிக்கு பதிலாக எடுத்துக்கொள்வது நல்லது.

இந்த கஞ்சியில் கருப்பு உளுந்தோடு கருப்பட்டி சேர்த்துள்ளதால் விரைவில் செரிமானமாக உதவுகிறது. இந்த கஞ்சி உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும். எனவே உடலுக்கு பலநூறு பலன்களை கொடுக்கும் இந்த கஞ்சியை செய்து பருகி பயன்பெறுங்கள்.

நன்றி - விருந்தோம்பல்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்