Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!

Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!

Priyadarshini R HT Tamil
Published Jan 13, 2024 01:00 PM IST

Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!

Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!
Black Urad Dal Puttu : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து புட்டு! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும்!

சிவப்பு அரிசி – ஒரு கப்

ஏலக்காய் – 10

(அரிசி ஒரு கப் என்றால், உளுந்து 2 கப் எடுக்க வேண்டும்)

சிவப்பு அரிசியை நன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த அரிசியை துணியில் சேர்த்து காய வைக்க வேண்டும்.

உளுந்தை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து நன்றாக வாசம் வரும்வரை வறுக்க வேண்டும். உளுந்தை எடுத்து வாயில் போட்டு கடித்தால் மொறுமொறுவென இருக்க வேண்டும்.

இதை ஆறவைத்து, இதனுடன் ஊறவைத்த அரிசி, ஏலக்காய் சேர்த்து மில்லில்கொடுத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

புட்டு செய்ய தேவையான பொருட்கள்

அரைத்த மாவு – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – ஒரு கப் (துருவியது)

பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – ஒரு கப்

செய்முறை

அரைத்த மாவை எடுத்து உப்பு தண்ணீர் சேர்த்து நல்ல உதிரி உதிரியாக வரும் வரை பிசைந்துகொள்ள வேண்டும்.

அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து, துணியில் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மீண்டும் தேங்காய் துருவல் சேர்த்து குழாயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

புட்டு குழாய் இல்லாவிட்டாலும், இட்லி பாத்திரத்திலே வைத்து வேகவைத்துக்கொள்ளலாம்.

இதனுடன் தேவைப்பட்டால் நெய், கட்டாயம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

குறிப்பு

கருப்பு உளுந்து முழு உளுந்தோ அல்லது உடைத்ததோ எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசி சாதாரண பச்சரிசியும் எடுத்துக்கொள்ளலாம்.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.