Black Jeera Thuvayal : கருஞ்சீரகத்தை இப்டி செஞ்சு, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு பாருங்க! சுவையும், ஆரோக்கியமும் உறுதி!
Black Cumin Thuvayal : கருஞ்சீரகத்தில் துவையல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது அரபு நாடுகளில் பெரும்பாலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் குரானில் காணப்படுகிறது.
இதை அம்மக்கள் அதிகளவில் தேநீர் தயாரிக்க் பயன்படுத்துகிறார்கள். இதில் பல்வேறு உணவுகள் செய்ய முடிந்தாலும், இதில் துவையல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – கால் கப்
(இதை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து ஆறவைக்கவேண்டும்.
அதே கடாயில் இரண்டு மிளகாய்களையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தும் ஆறியபின் மிக்ஸி ஜாரில் அல்லது கையில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
கடைசியாக வறுதத் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் மையாக அரைத்து விடக்கூடாது.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
கருஞ்சீரகம் பல்வேறு நன்மைகள் நிறைந்து என்பதால் இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பி12 ஆகியவை உள்ளது. தேவையான ஃபேட்டி ஆசிட்கள், நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் சோடியம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது.
கருஞ்சீரகத்தில் தைமோகுனன், கார்வக்ரால், டி அந்தோலே மற்றும் 4-டெர்பினோயல் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. அதில் சர்க்கரை, புற்றுநோய், இதய நோய், உடல் பருமன் ஆகியவையும் அடங்கும்.
கருஞ்சீரகம் சில பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது மற்றும் மெத்திசிலின் எதிர்ப்பு கொண்டது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
கருஞ்சீரக எண்ணெயில், ஃபைட்டோகெமிக்கல்கள் மற்றும் ஃபைட்டோஸ்டீரோல்கள் உள்ளது. அது பசியை கட்டுபடுத்தி கொழுப்பை கரைக்க உதவுகிறது.
கருஞ்சீரகம் வயோதிகர்களுக்கு ஏற்படும் அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.
லோடென்சிட்டி லிப்போபுரோட்டீன் எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை குறைக்கும் திறன் கருஞ்சீரகத்துக்கு உள்ளது. இதனால் இதய நோய் ஆபத்து குறைகிறது.
கருஞ்சீரகம், சர்க்கரை நோயை இயற்கையாக சரிசெய்து, உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கும், டைப் 2 சர்க்கரை நோய்க்கும் தீர்வு கொடுக்கிறது. இதை மூன்று மாதம் தொடர்ந்து எடுத்தால் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும்.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்புண்ணை ஆற்ற கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயின் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிரான நற்குணங்கள் நிறைந்தது. சரும நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது.
பல் பிரச்னைகளை சரிசெய்வதில் கருஞ்சீரகம் முதலிடம் வகிக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை தடுக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த கருஞ்சீரகத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து இயற்கையில் ஆரோக்கியம் பெற்றிடுங்கள்.
டாபிக்ஸ்