கருஞ்சீரக எண்ணெயில் 8 நன்மைகள் உள்ளதாம்! என்னவென்று பாருங்கள்! பயன்படுத்தும் முறைகளும் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கருஞ்சீரக எண்ணெயில் 8 நன்மைகள் உள்ளதாம்! என்னவென்று பாருங்கள்! பயன்படுத்தும் முறைகளும் என்ன?

கருஞ்சீரக எண்ணெயில் 8 நன்மைகள் உள்ளதாம்! என்னவென்று பாருங்கள்! பயன்படுத்தும் முறைகளும் என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 07, 2025 03:15 PM IST

கருஞ்சீரக எண்ணெயில் உள்ள நன்மைகள் என்ன?

கருஞ்சீரக எண்ணெயில் 8 நன்மைகள் உள்ளதாம்! என்னவென்று பாருங்கள்! பயன்படுத்தும் முறைகளும் என்ன?
கருஞ்சீரக எண்ணெயில் 8 நன்மைகள் உள்ளதாம்! என்னவென்று பாருங்கள்! பயன்படுத்தும் முறைகளும் என்ன?

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கருஞ்சீரக எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. இது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நோய்க்குறிகளைக் குறைக்கிறது. நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் போக்குகிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இந்த எண்ணெய் உங்கள் உடலில் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது வயிறு உப்புசம், மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்குகிறது. இதில் உள்ள வாயு நீக்கும் உட்பொருட்கள் உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கிறது. உங்கள் வயிறில் ஏதேனும் பொருமல் இருந்தால் அதை சரிசெய்து உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான சருமத்தைக் கொடுக்கிறது

இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், கருஞ்சீரக எண்ணெயை முகப்பருக்கள், எக்சைமா, சொரியாசிஸ் போன்ற சரும வியாதிகளை எதிர்த்து போராட வைக்கிறது. இது உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. உங்கள் சருமத்துக்கு புத்துணர்வு கொடுக்கிறது. சரும பளபளப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்குகிறது.

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

கருஞ்சீரக எண்ணெய் பொடுகு மற்றும் தலைமுடி இழப்பை சரிசெய்ய உதவுகிறது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் ஆரோக்கியமான, பளபளக்கும் தலைமுடிக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கருஞ்சீரக எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

கருஞ்சீரக எண்ணெயில் உள்ள உடலின் வளர்சிதையை அதிகரிக்கும் குணங்கள், உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது.

மூட்டு வலிகளை குணப்படுத்துகிறது

இதில் உள்ள வீக்கத்த்துக்கு எதிரான குணங்கள் உங்கள் மூட்டுகளில் உள்ள வலிகளைப் போக்குகிறது. இதனால் உங்களின் மூட்டு வலிகள் குணமடைகிறது. ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நாள்பட்ட வீக்கம் கொண்டவர்களுக்கு சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கிறது.

சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது

கருஞ்சீரக எண்ணெயில் உள்ள இதமளிக்கும் குணங்கள், ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் மூச்சுக்குழாய் வீக்கம் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. இதன் இதமளிக்கும் இயற்கை குணங்கள், உங்கள் சுவாசப்பாதையில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறது. இதனால் வீக்கம் குறைத்து, ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.