தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bitter Gourd Kuzhambu : பாகற்காய்குழம்பை கசப்பு சுவையின்றி செய்வது எப்படி? இந்த ஒரு டெக்னிக் மட்டும் போதும்!

Bitter Gourd kuzhambu : பாகற்காய்குழம்பை கசப்பு சுவையின்றி செய்வது எப்படி? இந்த ஒரு டெக்னிக் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 11, 2024 10:23 AM IST

Bitter gourd Kuzhambu : கசப்பில்லாத பாகற்காய் குழம்பு வைக்கலாமா?

Bitter Gourd kuzhambu : பாகற்காய்குழம்பை கசப்பு சுவையின்றி செய்வது எப்படி? இந்த ஒரு டெக்னிக் மட்டும் போதும்!
Bitter Gourd kuzhambu : பாகற்காய்குழம்பை கசப்பு சுவையின்றி செய்வது எப்படி? இந்த ஒரு டெக்னிக் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் கூறுகையில், பாகற்காய் என்றாலே கசக்கும் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், பாகற்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காய் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. சுவாச மண்டலத்தை சீர்செய்கிறது. சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மூல நோயை குணப்படுத்துகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த பாகற்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதற்கு பாகற்காயை கசப்பு சுவை இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி கூறியுள்ளார்.

மேலும் அவர், பாகற்காயில், 21 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் 4 கிராம், நார்ச்சத்துக்கள் 2 கிராம், தினசரி தேவையில் வைட்டமின் சி 99 சதவீதமும், வைட்டமின் ஏ 44 சதவீதமும், ஃபோலேட் 17 சதவீதமும், பொட்டாசியம் 8 சதவீதமும், சிங்க் 5 சதவீதமும், இரும்புச்சத்து 4 சதவீதமும் உள்ளது. எனவே இதை கட்டாயம் வாரத்தில் ஒருமுறையாவது சேர்ப்பது உடலுக்கு நன்மை தரும் என்று கூறினார்.

கசப்பில்லாத பாகற்காய் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – கால் கிலோ

புளி - பெரிய எலுமிச்சை அளவு

பாகற்காய் – 5 (சிறியது)

வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 7

தேங்காய் – கால் கப்

 

செய்முறை

பாகற்காயை கழுவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி வட்டமாக நறுக்கிக்கொள்ளவேண்டும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடலைப்பருப்பு மற்றும் வரமல்லி சேர்த்து வறுக்கவேண்டும்.

அவை லேசாக வறுபட்ட பின் சீரகம், மிளகு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவேண்டும். கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்கவேண்டும்.

வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் பொடித்த பின் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கனமான கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானவுடன் பாகற்காயை சேர்த்து வதக்கவேண்டும். பாகற்காய் வதங்கியதும் புளிக்கரைசல் மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து வேகவிடவேண்டும்.

பாகற்காய் புளி கரைசலில் நன்றாக வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதோடு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும்.

பின் பொடித்த வெல்லம் சேர்த்து குழம்பை மிதமான சூட்டில் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.

கடைசியாக கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து மூடி வைக்கவும். சுலபமான கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு தயார்.

WhatsApp channel

டாபிக்ஸ்