கடி ஜோக்ஸ் : ‘இவன் பைத்தியமா? இது தெரியாம பேச்சே’ உங்களை உருண்டு பெரண்டு சிரிக்கவைக்கும் காமெடிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக்ஸ் : ‘இவன் பைத்தியமா? இது தெரியாம பேச்சே’ உங்களை உருண்டு பெரண்டு சிரிக்கவைக்கும் காமெடிகள்!

கடி ஜோக்ஸ் : ‘இவன் பைத்தியமா? இது தெரியாம பேச்சே’ உங்களை உருண்டு பெரண்டு சிரிக்கவைக்கும் காமெடிகள்!

Priyadarshini R HT Tamil
Published Feb 24, 2025 12:45 PM IST

கடி ஜோக்ஸ் : வாழ்க்கையில் ரொம்ப விரக்தியாக உள்ளீர்களா? கவலையே வேண்டாம். இந்த கடி ஜோக்ஸ் படிச்சா போதும். விழுந்து விழுந்து சிரித்து ரிலாக்ஸ் ஆயிடுவீங்க. படித்துதான் பாருங்கள்.

கடி ஜோக்ஸ் : ‘இவன் பைத்தியமா? இது தெரியாம பேச்சே’ உங்களை உருண்டு பெரண்டு சிரிக்கவைக்கும் காமெடிகள்!
கடி ஜோக்ஸ் : ‘இவன் பைத்தியமா? இது தெரியாம பேச்சே’ உங்களை உருண்டு பெரண்டு சிரிக்கவைக்கும் காமெடிகள்!

ஏன்னா அது போஸ்ட் மரமாம் ஹாஹாஹா!

காசே தான் கடவுளடா?

காசு ஏன் நம்ம வீட்டுக்கு வர மாட்டேங்குதுன்னு தெரியுமா?

ஏன்னா, அதுக்கு நம்ம வீட்டு அட்ரஸ் தெரியாதாம். ஹாஹாஹா!

டியூப்லைட்டா இல்லை

ஒருத்தர் டியூப் லைட்ட பார்த்து சிரிச்சாராம். ஏன்?

ஏன்னா அதுல சோக் இருக்காம். ஹாஹாஹா!

இதெல்லாம் ஒரு காமெடியான்னு நீங்கள் கேக்கக்கூடாது

ஒரு நாள் ஆல்ஃபாபெட்ஸ்க்கெல்லாம் ரன்னிங் ரேஸ் வெச்சாங்களாம். எல்லா லெட்டர்ஸ்ம் ஓடிப்போச்சாம். ஆனா எஸ் மட்டும் நீந்தி போச்சாம். ஏன்?

ஏன்னா, அதுக்கு முன்னாடி ஆறு இருந்துச்சாம். ஹாஹாஹா!

பறவையே எங்கு இருக்கிறாய்?

பறவைகள் எல்லாம் ஏன் வேற நாட்டுல இருந்து நம்ம நாட்டுக்கு பறந்து வருது?

நடந்து வந்தா லேட் ஆகும். அதான். ஹாஹாஹா!

என்னா சுத்து?

ஒரு பையன் அவங்க அப்பாக்கிட்ட ஊட்டிக்கு கூட்டிக்கிட்டு போகணும்னு கேட்டானாம். ஏன்னு அவங்க அப்பா கேட்டாராம். அதுக்கு அவன் சொன்ன பதில கேட்டு உடனே அவன மெக்கானிக் ஷாப் கூட்டிட்டு போனாராம். ஏன்?

ஏன்னா, அவன் சுத்தி பாக்கணும்னு சொன்னானாம். அதான். ஹாஹாஹா!

பஸ்ல கூடயா?

ஒருத்தர் பஸ்ல வேகாம ஓடிப்போயி எல்லா டிக்கெட்டையும் எடுத்தாராம். ஏன்?

ஏன்னா அவர்தான பஸ்ஸோட கண்டக்டர். ஹாஹாஹா!

மொட்ட மாடி, மொட்ட மாடி

ஒருத்தர் மாடிக்கு விக் ஏடுத்துட்டு போனாராம், ஏன்?

ஏன்னா அது மொட்டமாடியாம். ஹாஹாஹா!

இது என்ன எக்ஸாம்

ஒரு பையன் எக்ஸ்ம்க்கு ஃபார்முலாவ விரல்ல ஃபுல்லா எழுதிட்டு போனானாம், ஏன்?

ஏன்ன, அவன் டீச்சர்தான் சொன்னாங்களாம், ஃபார்முலாலாம், ஃபிங்கர் டிப்ல இருக்கணும்னு. ஹாஹாஹா!

பேட் மேன் நாட் பேட் மேன்

பேட் மேனுக்கு ஏ, இ, ஐ, ஓ யூ லெட்டர்ஸ்தான் ஆல்ஃபபெட்ஸ்ல பிடிக்குமாம், ஏன்?

ஏன்னா அதுதான் வவல்ஸ் ஆச்சே ஹாஹாஹா!

மாண்புமிகு பழம்

எந்த பழத்திற்கு நாம் மரியாதை கொடுத்து கூப்பிடுவோம்?

பைனாப்பிள், அததானே அண்ணாசின்னு சொல்றோம். ஹாஹாஹா!

அமெரிக்காவுல இருக்கவேண்டியவங்க நாங்கெல்லாம்

அமெரிக்க beeய எப்படி கூப்டுவாங்க?

USBன்னு, ஹாஹாஹா!

இது என்னடா புது புரளியா இருக்கு?

லாயர்ஸ்லாம் டென்னிஸ், பேட்மிண்டன்லாம் சூப்பரா விளையாடுவாங்களாம், எப்படி?

ஏன்னா அவங்க கோர்ட்லதானே பிராக்டிஸ் பண்ணுவாங்க, ஹாஹாஹா!

இது என்னங்க?

அனிமல்ஸ்கெல்லாம் ரேஸ் வெச்சா எந்த அனிமல் முதல்ல வரும்?

முதலை தாங்க, ஹாஹாஹா!

இத எதுல சேர்க்கிறதுன்னே தெரியலயே?

எந்தப்பழம் நமக்கு எக்ஸ்ட்ராட்னரியான ரைட்டிங் ஸ்கில் கொடுக்கும்?

நாவல் பழம், ஹாஹாஹா!

இன்றைய சிந்தனை வரிகள் 

எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். ஒவ்வொரு புதிய நாளும் கற்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.