கடி ஜோக்ஸ் : ‘ஹாஹாஹா! சிரி சிரி சிரி! கலகலவென சிரி, கண்ணில் நீர் வர சிரி! நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக்ஸ் : ‘ஹாஹாஹா! சிரி சிரி சிரி! கலகலவென சிரி, கண்ணில் நீர் வர சிரி! நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

கடி ஜோக்ஸ் : ‘ஹாஹாஹா! சிரி சிரி சிரி! கலகலவென சிரி, கண்ணில் நீர் வர சிரி! நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 09, 2025 01:57 PM IST

கடி ஜோக்ஸ் : காலை முதல் மாலை வரை உழைத்து களைத்து சோர்ந்து இருக்கிறீர்களா? இதோ உங்கள் சோர்வைப் போக்க சில காமெடிகள். சிரித்துவிட்டு சென்று வேலைகளை தொடருங்கள்.

கடி ஜோக்ஸ் : ‘ஹாஹாஹா! சிரி சிரி சிரி! கலகலவென சிரி, கண்ணில் நீர் வர சிரி! நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!
கடி ஜோக்ஸ் : ‘ஹாஹாஹா! சிரி சிரி சிரி! கலகலவென சிரி, கண்ணில் நீர் வர சிரி! நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

க‘படி’ ஹாஹாஹா!

காது கேக்‘காது’

ஒருத்தன் சோபால உக்காந்துகிட்டு இருந்தப்போ பேய் கத்துச்சாம். பயமுறுத்துச்சாம். ஆனாலும் பயப்படாம அவன் அங்கேயே உக்காந்துகிட்டு இருந்தானாம். ஏன்?

ஏன்னா, அவனுக்கு காது கேக்காதாம். ஹாஹாஹா!

பூவுக்குள் பூகம்பம்

ஒருத்தன் பூவ எடுத்து துப்பாக்கிக்குள்ள போட்டு சுட்டானாம். ஏன்?

ஏன்னா, அது குண்டு மல்லியாம். ஹாஹாஹா!

ஸ்கூலுக்கு போகணுமா?

ஒரு ஸ்கூல்ல 5 மாடிகள் இருக்காம். ஒவ்வொரு மாடிக்கும்போகணும்னா 18 படிகள் ஏறணுமாம். 5வது மாடிக்கு போகணும்னா எத்தனை படிகட்டுக்கள் ஏறணும்?

எல்லா படிகட்டுக்களும்தான் ஏறணும். ஹாஹாஹா!

தண்ணீ தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்

ஒருத்தன் மூச்சு முட்ட குடிச்சானாம். ஆனா போதையே ஏறலையாம். ஏன்?

ஏன்னா அவன் குடிச்சது பச்ச தண்ணியாம். ஹாஹாஹா!

நீளமா? நீலமா?

ரொம்ப நீளமான பழம் எது?

நாவல் பழம்தான் வேற எது? ஹாஹாஹா!

ஆல்ஃபாபெட் காமெடி

ஏ – இசட் ஆல்ஃபாபெட்ல ஒன்னு மட்டும் மிஸ் ஆகுது. அது எது?

ஏ – இசட் ஆல்ஃபாபெட்ல ஒன்னு (1) எப்படி வரும். ஹாஹாஹா!

மாடி மேல மாடி கட்டி

ஒருத்தர் மாடிக்கு விக் எடுத்துட்டு போனாராம். ஏன்?

ஏன்னா அது மொட்ட மாடியாம். ஹாஹாஹா!

தொழில் ரகசியம்

போட்டோஃகிராபி தொழில்ல முன்னேற எது முக்கியமானது? திறமையா? அதிர்ஷ்டமா?

இரண்டுமே இல்ல கேமரா தான். ஹாஹாஹா!

சாமியார் காமெடி

ஒரு சக்திவாய்ந்த சாமியார் உலகத்துல இருக்க எல்லா ஆவிகளையும் விரட்டிடுவாராம். ஆனால் அவரால ஒரு ஆவிய மட்டும் விரட்ட முடியலையாம். ஏன்?

ஏன்னா அது கொட்டாவியாம். ஹாஹாஹா!

அருவியா? குருவியா?

அருவிக்கும், குருவிக்கும் என்ன வித்யாசம்?

மேலிருந்து கீழே வந்தா அருவி, கீழிருந்து மேலே போனா குருவி. ஹாஹாஹா!

பைபை

ஒரு பையன் தினமும் ஸ்கூல்க்கு ஏணிய எடுத்துட்டு போவானாம். ஏன்?

ஏன்னா, அது ‘மேல்’ நிலைப்பள்ளியாம். ஹாஹாஹா!

வெட்டுக்கிளி

ஒரு கிளி மழையில நினைஞ்சா என்னாகும்?

வெட்டுக்கிளியாகும் (Wet) ஹாஹாஹா!

அச்சச்சோ

எலிய என்ன பண்ணினா யானையாகும்?

வேற என்ன? அதுக்கு பேன்ட் போட்டா, எலிஃபேன்ட், ஹாஹாஹா!

படிப்புதான் சார் எல்லாம்

ஒரு பையன் ஹைவேஸ்ல உக்காந்து படிக்கிறானாம். ஏன்?

ஏன்னா அவன் ஹையர் ஸ்டடீஸ்க்கு படிக்கிறானாம். ஹாஹாஹா!

முட்டை

எல்லா ஊர்லயும் முட்டை கிடைக்கும். ஆனா இந்த ஊர்ல மட்டும் முட்டை அதிகமா கிடைக்கும். அது எந்த ஊர்?

அது எக்மோர். ஹாஹாஹா!

எந்த மாசம்?

டெய்லருக்கு பிடிச்ச மாசம் எது?

தை மாசம் தான் ஹாஹாஹா!

காத்தடிக்குது, காத்தடிக்குது

யார் அடிச்சா வலிக்காது

காத்தடிச்சாதான். ஹாஹாஹா!

செம கடி

ஒருத்தன் செயின் எடுத்துட்டுப்போய் அடகு கடையில வெச்சானாம். சேட்டு அத வாங்க மாட்டேன்னு சொல்லி திட்டி அனுப்பி விட்டாராம். ஏன்?

ஏன்னா, அவன் வெச்சது கீ செயினாம். ஹாஹாஹா!

வீடு

சென்னை கடற்கரையில வீடு கட்டினா என்ன ஆகும்?

காசுதான் செலவாகும். ஹாஹாஹா!

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.