கடி ஜோக்ஸ் : ‘தி கிரேட் கிரிகாலன் ஷோ‘ மயங்கி விழுந்துடாதீங்க… நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க செம்ம ஜோக்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக்ஸ் : ‘தி கிரேட் கிரிகாலன் ஷோ‘ மயங்கி விழுந்துடாதீங்க… நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க செம்ம ஜோக்!

கடி ஜோக்ஸ் : ‘தி கிரேட் கிரிகாலன் ஷோ‘ மயங்கி விழுந்துடாதீங்க… நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க செம்ம ஜோக்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 02, 2025 04:39 PM IST

கடி ஜோக்ஸ் : உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்க வேண்டுமா? இதோ மயங்கி விழும் அளவுக்கு இருக்கும் இந்த ஜோக்.

கடி ஜோக்ஸ் : ‘தி கிரேட் கிரிகாலன் ஷோ‘ மயங்கி விழுந்துடாதீங்க… நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க செம்ம ஜோக்!
கடி ஜோக்ஸ் : ‘தி கிரேட் கிரிகாலன் ஷோ‘ மயங்கி விழுந்துடாதீங்க… நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க செம்ம ஜோக்!

எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்

அப்படியா?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல,

இப்ப என்ன உங்க வயசு அவ்ளோதானே?

ஆமா டாக்டர், ஆமா?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம், சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க…

உங்க பேரென்ன?

ராமநாதன்.

என்ன தொழில் பண்றீங்க?

பைனான்ஸ்.

நைட்டு நல்லா தூங்குவீங்களா?

கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்.

சந்தோஷம், தூக்கத்துல கனவுலாம் வருமா?

நெறய டாக்டர்

மயங்கி விழுந்துடாதீங்க? 

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா?

ஆமா டாக்டர்.

எந்த மாதிரி நடிகைங்க?

ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க…

சிஸ்டர், 45ன்னு நோட் பண்ணிக்குங்க, ம்ம்ம்…

சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா?

சில சமயம் அம்பிகா, ராதா மாதிரியானவங்களும் வருவாங்க.

சந்தோஷம், சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க, ம் அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க?

ஷகிலா...

உஹூம், ஷகிலாலாம் எவர்கிரின், அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது. வேற, வேற?

வேற, சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க, திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க,

ம்ம், சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க, ம்ம்ம்… அப்புறம் ராமநாதன்.

அப்புறம், அப்புறம் ம்ம்ம். என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க.

சிஸ்டர் 40ன்னு நோட் பண்ணிக்குங்க, ம் சொல்லுங்க ராமநாதன்.

ம்ம்… அவ்ளோதான் டாக்டர்.

அவ்ளோதானா, சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க.

45, 48, 54, 41

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு.

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்.

என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா?

தெரியும் டாக்டர். பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா? அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு. ரொம்ப தேங்ஸ் டாக்டர்!

அடப்பாவி.

சமூக வலைதள பகிர்வு.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.