Birthday Wishes : நண்பர்களை நாம் ஏன் கொண்டாடவேண்டும்? – பிரபலங்களின் வாழ்த்துச் செய்தி என்ன பாருங்களேன்!
Birthday Wishes : நண்பர்களை நாம் ஏன் கொண்டாடவேண்டும்? – பிரபலங்களின் வாழ்த்துச் செய்தி உணர்த்தும் பாடம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால், உங்களுக்கு அன்பானவர்களின் பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றவேண்டுமா? அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள, வாழ்த்துக்களை நீங்கள் பகிரும்போது, அது அவர்களின் பிறந்த நாளை மிகவும் இனிமையானதாக்கும். இனிமையான வாழ்த்துக்கள், மனதை தொடும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், இதயத்தை வருடும் வாழ்த்துக்கள் என இங்கு சில வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தி, அவர்களின் நாளை மேலும் சிறப்பாக மாற்றுங்கள். உங்கள் சொந்தங்களின், நட்புக்களின் முக்கியமான நாட்கள் உங்கள் வாழ்த்துக்கள் இல்லாமல் எப்படி? நாங்கள் உங்களுக்கு இங்கு பிரத்யேக வாழ்த்துக்களை தொகுத்துள்ளோம். அவற்றை பயன்படுத்தி அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.
ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?
ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.
நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.
அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.
பிரபலங்களின் பிறந்த நாள் வாழ்த்து செய்திகள்
உனது வாழ்வில் எத்தனை ஆண்டுகள் நீ வாழ்ந்தாய் என்பது இறுதியில் கணக்கல்ல; உன் வாழ்வில் எத்தனை ஆண்டுகள் உனது ஆண்டுகளாக இருந்தது என்பதே கணக்கு – ஆபிரஹாம் லிங்கன்
உங்களின் பிறந்த நாளை வயதில் எண்ணுங்கள், ஆண்டுகளில் அல்ல, உங்கள் வாழ்வை புன்னகையில் எண்ணுங்கள், கண்ணீரில் அல்ல – ஜான் லெனான்.
நீங்கள் உங்கள் வாழ்வில் கொண்டாடவேண்டியதும், பாராட்ட வேண்டியதும் எத்தனை அதிகமோ, அதேபோல் வாழ்விலும் நீங்கள் கொண்டாட வேண்டியது உள்ளது – ஓப்ரா வின்ஃப்ரே
உங்களைப்பற்றி முழுமையாக தெரிந்தவர்தான் உங்களின் நண்பர், ஆனாலும் உங்களை நேசிப்பவர் – எல்பர்ட் ஹீயூபார்ட்
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகம், உறங்கும் மனம் – இவைதான் சிறந்த வாழ்வு என்பது – மார்க் டிவைன்
எனது உண்மையான நண்பர்களுக்கு நான் செய்யக்கூடாதது என்று எதுவுமில்லை. அன்பானவர்கள் குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது எனது இயல்பும் கிடையாது – ஜேன் ஆஸ்டின்
நம்மை உண்மையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களுக்கு நாம் நன்றியை தெரிந்துகொள்வோம். உண்மையில் அவர்கள் சிறந்த தோட்டத் தொழிலாளர்கள், அவர்கள்தான் நம் ஆன்மாவை செப்பனிட்டு அழகிய பூக்கள் பூக்கச் செய்கிறார்கள் – மார்கெல் ப்ரவுஸ்ட்
உண்மையான நண்பர்கள் வைரத்தைப் போன்றவர்கள் – பிரகாசமான, அழகான, மதிப்புமிக்க, எப்போதும் ஸ்டைலானவர்களாக இருக்கிறார்கள். – நிக்கோல் ரிச்சி
நல்ல நண்பரைக் கொண்டிருக்கும் வழி ஒன்றே ஒன்றுதான் இருக்கும் – ரால்ஃப் வால்டூ எமர்சன்
ஒட்டுமொத்த உலகமும் வெளியேறும்போது, உள்ளே வருபவன்தான் உண்மையான நண்பன் – வால்டர் வின்செல்
இந்த கூற்றுகளின்படி அமைந்தவர்கள்தான் உண்மையான நண்பர்கள். அவர்களை நாம் பிறந்த நாளில் கொண்டாடுவது மிகவும் அத்யாவசியமானதாகிறது.
தொடர்புடையை செய்திகள்