Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழிகள் மட்டுமல்ல; கணவர்களை கொஞ்சம் கலாய்த்தும் வாழ்த்தலாமா?-birthday wishes not only languages like world and life can congratulate the husbands with a bit of fun - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழிகள் மட்டுமல்ல; கணவர்களை கொஞ்சம் கலாய்த்தும் வாழ்த்தலாமா?

Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழிகள் மட்டுமல்ல; கணவர்களை கொஞ்சம் கலாய்த்தும் வாழ்த்தலாமா?

Priyadarshini R HT Tamil
Aug 11, 2024 07:10 AM IST

Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழி கூறும் வாழ்த்துக்களை நேற்று பார்த்தோம். இன்று கணவர்களை எப்படி கலாய்த்து வாழ்த்தலாம் என்று பார்க்கலாம்.

Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழிகள் மட்டுமல்ல; கணவர்களை கொஞ்சம் கலாய்த்தும் வாழ்த்தலாமா?
Birthday Wishes : உலகே, உயிரே என கொஞ்சல் மொழிகள் மட்டுமல்ல; கணவர்களை கொஞ்சம் கலாய்த்தும் வாழ்த்தலாமா?

இதுவே உங்கள் கணவரின் பிறந்த நாள் என்றால், அந்த நாளில் அவர்களை நீங்கள் எப்படியெல்லாம் வாழ்த்தவேண்டும்? அதுமட்மின்றி, உங்களுக்கு அன்பானவர்களின் பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றவேண்டுமா? அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள, வாழ்த்துக்களை நீங்கள் பகிரும்போது, அது அவர்களின் பிறந்த நாளை மிகவும் இனிமையானதாக்கும்.

உங்கள் கணவருக்கு நீங்கள் வாழ்த்துக்களையோ அல்லது ஆச்சர்யங்களையோ கூறும்போது, அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். மேலும் அவர்களின் மீதான உங்களின் அன்பை அது அதிகரித்துக்காட்டும்.

மேலும், அவர்களுக்கு நீங்கள் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்கலாம். அவரின் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் தருணத்தை ஏற்படுத்தி தரலாம். அவர்களுக்கு பிடித்த கேக்குகளை வாங்கலாம். அவர்களுக்கு சிறப்பு வாசகங்களை எழுதலாம்.

உங்கள் கணவரை எப்படி வாழ்த்தலாம்?

அவருடன் உங்கள் வாழ்வை பகிர்ந்துகொள்வது உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளைக் கொடுத்துள்ளது என்று அவருக்கு உணர்த்துங்கள். நீங்கள் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்த்துக்களை அனுப்பலாம்.

உங்கள் கணவருக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே உள்ள நிலையில், அவருக்கு நீங்கள் புதிதாக செய்ய எதுவும் இல்லாதபோது, அவர்களுக்கு நீங்கள் பிரத்யேக வாசகங்களையே எழுதலாம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அல்லது நாள் உன்னை காதலிக்கிறேன் போன்ற வாசகங்களைக் கடந்து சிறப்பான வாழ்த்துக்களை உங்கள் கணவருக்கு தெரிவிக்கும்போது, அது அவர்களுக்கு உற்சாகத்தைத்தரும்.

உங்கள் கணவருக்கு பிரத்யேக வாழ்த்துக்களை தெரிவிக்கும்போது, அது உங்கள் இதயத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அந்த வாசத்தை நீங்கள் மேலும் அதிகரிக்க விரும்பினால், அது அவர்களுக்கு நீங்கள் வாங்கியுள்ள பரிசை குறிப்பிடுவது அல்லது நீங்கள் அவர்களுக்காக செய்துள்ள பார்ட்டியை குறிப்பிடலாம்.

உங்கள் கணவருக்கான ரொமாண்டிக் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்கையின் அர்த்தத்தை உணர்த்தும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். உங்கள் குடும்பத்தையும் சேர்த்து வாழ்த்துக்களை தெரிவிப்பது, இன்னும் அவர்களின் இதயத்தை தொடுவதாக இருக்கும்.

உங்கள் கணவருக்கான பிரத்யேக கலாய் வாழ்த்துக்கள்

உனது குரட்டையை வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ளும் ஒரே ஒருத்தியின் வாழ்த்துக்கள் இது, இனிய பிறந்த நாள்!

நான் உனக்கு நல்ல பரிசு வாங்கவேண்டும் என நினைத்தேன். பின்னர் தான் நினைவுக்கு வந்தது நானே உனது பெரிய பரிசு என்று, இனிய பிறந்த நாள்!

எனக்கு சில நேரங்களில் நீ எப்படித்தான் என்னுடன் இருக்கிறாயோ என்று தோன்றும், பின்னர் நினைவுக்கு வரும் நான் உன்னுடன் இருப்பதுபோல்தான் என, இருவருக்கும் எரிச்சலையூட்டும் மேலும் ஓராண்டு, ஐ லவ் யூ!

எனது தலையணைக்கும், கால் அமுக்கு இயந்திரத்துக்கும் இனிய வாழ்த்துக்கள்!

திருமணத்தில் நேர்மை மிகவும் முக்கியம், நினைவில் கொள் உனக்கு வயதாகிக்கொண்டே செல்கிறது. இனிய பிறந்த நாள்!

நமது மொக்கை ஜோக்குகளுக்கு நாமே சிரித்துக்கொள்ளவும், இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொள்ளவும் மேலும் ஒரு ஆண்டு. நமது ரொமான்ஸ்களை இரவு நேரே நெட்ஃபிளிக்ஸ் மாரத்தான்களுடன் கொண்டாடுவோம். இனிய பிறந்த நாள் அன்பே!

இன்னும் டீன் ஏஜ் பையன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் வயதாகிவிட்டது, என்பதை உணர்த்த இந்த வாழ்த்து! இனிய பிறந்த நாள்!

உங்களுக்கு வயதாகிறது, கேக்குக்கு ஆகும் செலவைவிட மெழுகுவர்த்தி செலவு அதிகரிக்கிறது அன்பே! இனிய வாழ்த்துக்கள்!

உங்கள் பிறந்த நாளில் வாக்களிக்கிறேன். எத்தனை மொக்கை ஜோக்கை சொன்னாலும் சிரிப்பேன் என்று, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.