Birthday wishes : ‘அம்மா எனும் மந்திரமே’ பெற்ற தாயக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவது எப்படி என்று பார்ப்போமா?
Birthday wishes : ‘அம்மா எனும் மந்திரமே’ பெற்ற தாயக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால், உங்களுக்கு அன்பானவர்களின் பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றவேண்டுமா? அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள, வாழ்த்துக்களை நீங்கள் பகிரும்போது, அது அவர்களின் பிறந்த நாளை மிகவும் இனிமையானதாக்கும். இனிமையான வாழ்த்துக்கள், மனதை தொடும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், இதயத்தை வருடும் வாழ்த்துக்கள் என இங்கு சில வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தி, அவர்களின் நாளை மேலும் சிறப்பாக மாற்றுங்கள். உங்கள் சொந்தங்களின், நட்புக்களின் முக்கியமான நாட்கள் உங்கள் வாழ்த்துக்கள் இல்லாமல் எப்படி? நாங்கள் உங்களுக்கு இங்கு பிரத்யேக வாழ்த்துக்களை தொகுத்துள்ளோம். அவற்றை பயன்படுத்தி அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.
அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.
இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.
நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.
அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.
அம்மாவுக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீ எனக்கு எத்தனை அன்பானவள் என்பதை நான் வார்த்தைகளால் கூற முடியாது. நான் ஒவ்வொரு நாளும் உனக்கு நன்றியுடையவராய் இருப்பேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
என்னிடம் எனக்கு பிடித்த அனைத்தும் உன்னிடம் நான் கற்றவை. உன்னில் இருந்து தோன்றிய நபர்தான் தான். எனக்கு ரோல் மாடலாக இருப்பதற் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
நீ என்னைவிட வயதானவர் என்பது எனக்கு மகிழ்ச்சி. ஆனால், நம்மை சகோதரிகள் என்று தான் கூறுவார்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
தினமும் நீங்கள்தான் எங்களுக்கு உணவு சமைக்கிறீர்கள். இன்று நாங்கள் உங்களின் கேக்தை தயாரிக்கிறோம். எங்களுக்காக எத்தனை உழைத்த கரங்கள் இவை என்று எங்களுக்கு தெரியும் அதற்கு ஓய்வு கொடுக்க விழைகிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
உங்களுக்கு இதைவிட சிறந்த பிறந்த நாள் அமையட்டும். ஏனெனில் எல்லா நாளிலும் கொண்டாடப்படவேண்டியவர்கள் நீங்கள். எங்களுக்குள் எப்போதும் நிறைந்திருக்கும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
எனது பலம், பலவீனம், எனது ஆற்றல், செயலிழப்பு, எனது மகிழ்ச்சி, கண்ணீர் எப்போதும் முரண் நிறைந்வர் நீங்கள். எங்களை நல்வழியில் கொண்டு செல்ல உங்களை கெட்டவர் ஆக்கிக்கொள்கிறீர்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
நேற்று, இன்று, நாளை என என்றும் எனக்காக இருக்கும் ஒரு நபர் என்றால் அது நீங்கள்தான் அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
உங்களை வாழ்த்துவது எளிது, ஆனால் நீங்களாக வாழ்வது கடினம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்