Birthday wishes : உடன் பிறந்தவர்களை காமெடியாகவும், அன்பாகவும் பிறந்த நாளில் வாழ்த்த வேண்டுமா? இதோ ஐடியாக்கள்!
Birthday wishes : உடன் பிறந்தவர்களை காமெடியாகவும், அன்பாகவும் பிறந்த நாளில் வாழ்த்த வேண்டுமா? இதோ எப்படியெல்லாம் வாழ்த்தலாம் பாருங்கள்.
பிறந்த நாள்
உங்களுக்கு அன்பானவர்களின் பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றவேண்டுமா? அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள, வாழ்த்துக்களை நீங்கள் பகிரும்போது, அது அவர்களின் பிறந்த நாளை மிகவும் இனிமையானதாக்கும்.
இனிமையான வாழ்த்துக்கள், மனதை தொடும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், இதயத்தை வருடும் வாழ்த்துக்கள் என இங்கு சில வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தி, அவர்களின் நாளை மேலும் சிறப்பாக மாற்றுங்கள்.
ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?
ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.
இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.
நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.
அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.
உடன் பிறந்தவர்களுக்கு பிரத்யேக வாழ்த்துக்கள்
உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு பிறந்த நாளா? அது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான நாள். அவர்களை வாழ்த்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீ வளரலாம். ஆனால், வாழ்நாள் முழுவதும் நீ முதிர்ச்சியடையாதவன்தான், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஃபேஸ் புக் நியாபகப்படுத்தாமல் நினைவில் இருக்கும் ஒரு நபரின் பிறந்த நாள் இது!
நாம் உடன்பிறந்தவர்களாக பல பிறந்த நாட்களை கொண்டாடியுள்ளோம். ஆனால் எனக்கு சலிக்கவில்லை. இந்த பிறந்த நாளையும் நான் கொண்டாட காத்திருக்க முடியாது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் நம்பமுடியாத அளவு திறமைகளைக் கொண்டவர், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வீட்டில் அனைவருக்கும் என்னைத்தான் பிடிக்கும், ஆனால் நீங்களும் சரிதான், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இன்று தேசிய விடுமுறையாக இருக்கவேண்டும். ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை. அதுவரை நாம் கேக் சாப்பிட்டுக்கொண்டே பல பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளலாம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! என் உடன்பிறப்பே, கேக்குகளுக்கு சண்டை போடும் காலத்தை நாம் கடந்துவிட்டோம்.
உங்களுக்கு வயது அதிகரித்துவிட்டதைப்போல் நீங்கள் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. வாருங்கள் நாம் கொண்டாடலாம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் எனக்கு மூத்தவர், நான் உங்களைப் பார்த்தே வளர்ந்து வருகிறேன். எப்போதும் என்னுடன் நிற்பதற்கு நன்றிகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இன்று நாம் சிறப்பான ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நானே இந்த விட்டிற்கு செல்லம், இந்தாண்டு உங்களையும் வீட்டின் செல்லமாக அங்கீகரிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எனது உடன்பிறப்பே, உனது ரகசியங்களை நான் அறிவேன். எனவே எனக்கு அதிக கேக் கொடுக்கவேண்டும்.
உனது கடின உழைப்பு மற்றும் அன்பு என நீ விதைத்தை கொண்டாடும் நாள். நீ எங்கள் வாழ்வை சிறப்பாக்கிவிட்டாய், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கடந்த காலத்தை மற, மீட்க முடியாது, எதிர்காலத்தை மற, கணிக்க முடியாது, நிகழ்காலத்தையும் மற, நான் இருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீ பெரியவர் அணியும் டையப்பர் அணிய துவங்கவுள்ளாய், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தொடர்புடையை செய்திகள்