Birthday Wishes : பெற்ற மகளின் பிறந்த நாளை கொண்டாடலாமா.. மகளை நெகிழ வைக்கும் பரிசுகளும் வாழ்த்து மொழிகளும் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : பெற்ற மகளின் பிறந்த நாளை கொண்டாடலாமா.. மகளை நெகிழ வைக்கும் பரிசுகளும் வாழ்த்து மொழிகளும் இதோ!

Birthday Wishes : பெற்ற மகளின் பிறந்த நாளை கொண்டாடலாமா.. மகளை நெகிழ வைக்கும் பரிசுகளும் வாழ்த்து மொழிகளும் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Sep 04, 2024 10:00 AM IST

Birthday Wishes : போட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், பிரத்தேகமான போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் பிறந்த நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம். தங்கம், வெள்ளி, வைரம் என அவர் அவர் வசதிக்கு ஏற்ப நகைகளை பரிசளிக்கலாம்.

Birthday Wishes : பெற்ற மகளின் பிறந்த நாளை கொண்டாடலாமா.. மகளை நெகிழ வைக்கும் பரிசுகளும் வாழ்த்து மொழிகளும் இதோ!
Birthday Wishes : பெற்ற மகளின் பிறந்த நாளை கொண்டாடலாமா.. மகளை நெகிழ வைக்கும் பரிசுகளும் வாழ்த்து மொழிகளும் இதோ! (pixabay)

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

பிறந்த நாளுக்கான பரிசுகள்

அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், பிரத்தேகமான போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் பிறந்த நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம். தங்கம், வெள்ளி, வைரம் என அவர் அவர் வசதிக்கு ஏற்ப நகைகளை பரிசளிக்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. உங்கள் செல்ல மகளுக்கான பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

மகளை வீட்டின் பெருமை என்பார்கள். குடும்பம் முழுமையடைய ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். மகள்கள் வேறு பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். மகளின் பிறந்தநாள் என்றால் வீட்டில் மகிழ்ச்சி அலை வீசுகிறது. உங்கள் மகளின் பிறந்தநாளை சிறப்பாக்க, நீங்கள் அவளுக்கு ஒரு அழகான செய்தியை அர்ப்பணிக்கலாம். உங்கள் மகளுக்கு வயது அதிகமாக இருந்தால், இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

உன் அழகு முகத்தில்

இந்த புன்னகை எப்போதும் மலரட்டும்

நீ எங்கு அடியெடுத்து வைத்தாலும்

மகிழ்ச்சி உன்னுடன் தொடரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகளே..

 

என்னால் உன் மகிழ்ச்சியை கொஞ்சம் நீட்டிக்க முடியும்,

நான் உன்னை மிகவும் நேசிக்க முடியும்,

மகளே, உன் பிறந்தநாளில் என் வாழ்த்துகள்

நீ விரும்பும் ஒரு உலகத்தை என்னால் கொடுக்க முடியும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல மகளே

 

நீ எப்போதும் இப்படி சிரிக்கிறாய்,

வானத்தின் பறவைகளைப் போல சிரிக்கிறாய்,

இந்த சிறப்பு நாளில் உங்கள் ஆசை நிறைவேறட்டும்,

கேட்காமலேயே உனக்கு எல்லா மகிழ்ச்சி கிடைக்கட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே..

 

எப்போதும் சிரித்திரு,

எப்போதும் மகிழ்ந்திரு,

எப்போதும் ஜெயித்திரு,

எப்போதும் முன்னேறிச் செல்

என் அன் மகளே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

உங்களுக்கு நெருக்கமானவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவதற்கான புது புது யுக்தியை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!