தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Biriyani What Is Biryani In Onion How About Here Is The Recipe

Biriyani : என்ன வெண்டைக்காயில் பிரியாணியா? – எப்படி இருக்கும்? இதோ ரெசிபி

Priyadarshini R HT Tamil
Feb 27, 2024 10:52 AM IST

Biriyani : என்ன வெண்டைக்காயில் பிரியாணியா? – எப்படி இருக்கும்? இதோ ரெசிபி

Biriyani : என்ன வெண்டைக்காயில் பிரியாணியா? – எப்படி இருக்கும்? இதோ ரெசிபி
Biriyani : என்ன வெண்டைக்காயில் பிரியாணியா? – எப்படி இருக்கும்? இதோ ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

பிரியாணி முகலாயர்களின் உணவு, மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி வகைகளில் குழம்பு வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நமக்கு பிரியாணி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. மட்டன், சிக்கன், இறால், மீன் அனைத்திலும் பிரியாணி செய்து அசத்த துவங்கிவிட்டோம். காய்கறி உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு என்ன செய்வது?

அவர்களுக்கும் காய்கறி, மஸ்ரூம் என பிரியாணி வகைகளை கண்டுபிடித்து செய்து, சாப்பிட்டு மகிழ்ந்து வருகிறோம். பிரயாணிக்கு பொதுவாக பாஸ்மதி அரிசி சிறந்தது. இன்னும் பாரம்பரிய சுவையில் வேண்டுமானால் சீரக சம்பா அரிசியை பயன்படுத்தி செய்துகொள்ளலாம்.

இஞ்சி, பூண்டு, தேங்காய்ப்பால் என மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யப்படும் பிரியாணி செய்து கொண்டிருக்கும்போதே வாசம் வந்து வயிற்றைக்கிள்ளும். வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

காய்கறிகள் – கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பேபி கார்ன், உருளைக்கிழங்கு அலசி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கொத்தமல்லி, புதினா – கைப்பிடி அளவு

கரம் மசாலா – 2 ஸ்பூன்

சோம்புத்தூள் – 1 ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 ஸ்பூன் (காரம் அதிகம் விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

பிரியாணி இலை – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்/நெய் – 2-4 ஸ்பூன்

தேங்காய் பால் பிழிந்தது – 3 கப்

செய்முறை

எண்ணெய் அல்லது நெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தி, பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றகா வதக்கவும். அனைத்தையும் நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

புதினா, கொத்தமல்லி இலைகளை அடுத்ததாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கரம் மசாலாப்பொடி, மஞ்சள் பொடி, சோம்பு பொடி, மிளகுப் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். (இவை பொடிகளாக இல்லாவிட்டால், சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, ஸ்டார் சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, ஒன்றாக சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்)

காய்கறிகளை சேர்த்து வதக்கவும், பின்னர் ஊறவைத்து அலசிய அரியை வதக்க வேண்டும்.

அனைத்தையும் குக்கருக்கு மாற்றி, எலுமிச்சை சாறு, தண்ணீர் – தேங்காய் பால் தேவையான அளவு சேர்த்து, ஒருமுறை கிளறிவிட்டு உப்பு சேர்த்து வழக்கமாக நீங்கள் எடுக்கும் நேரம் அல்லது முறையில் வேக விட வேண்டும்.

தயாரானவுடன், ஒரு ஸ்பூன் நெய், கொத்தமல்லி இழைகள் தூவி பரிமாறலாம்.

இன்னும் சுவையை அதிகரிக்க ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்து, முந்திரியையும் வறுத்து மேலே தூவி பரிமாறலாம்.

வெங்காயம், வெள்ளரி தயிர் பச்சடியுடனோ அல்லது எந்த கிரேவி வேண்டுமானாலும் சேர்த்து பரிமாறலாம்.

ஏதேனும் ஒரு காயை மட்டும் பயன்படுத்தி கூட பிரியாணி செய்ய முடியும். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளின் மதிய உணவுக்கும் கொடுத்துவிடலாம்.

உங்களுக்கு வெண்டைக்காய் பிடிக்கும் என்றால் அதையும் எண்ணெயில் வறுத்து சேர்த்துக்கொள்ள வித்யாசமான சுவையை கொடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்