Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Priyadarshini R HT Tamil
Jan 20, 2024 10:30 AM IST

Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Betel Leaves : ஒரு வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

கால்சியம் சத்து அதிகம் நிறைந்த வெற்றிலையை சாப்பிடும்போது மூட்டுவலி பிரச்னைகள் ஏற்படாது. செரிமான பிரச்னைகள், ஆஜீரண கோளாறுகள் ஏற்படாது. வாயுத்தொல்லை, சளி தொடர்பான பிரச்னைகளும் ஏற்படாது. மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்காது.

இந்த வெற்றிலையும் ரோஜா குல்கந்தை சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகிறது.

சுத்தமான பன்னீர் ரோஜாவுடன், தேன், கற்கண்டு கலந்து தயாரிக்கப்படுவது ரோஜா குல்கந்து. இது நாட்டு மருந்து கடைகள், காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.

குல்கந்து உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக்கொடுக்கும். குல்கந்தை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்வதால், சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி சருமத்தை நல்ல பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படாது. சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைப்போக்கி இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

ராஜாக்கள் குல்கந்து அதிகளவில் எடுத்துக்கொள்வார். வயிற்றுப்புண்ணை சரிசெய்யும். எந்தவித குடல் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்யும்.

ரோஜா குல்கந்தை சாப்பிடும்போது, அது ஆண்மை குறைபாட்டை சரிசெய்கிறது. மலட்டுத்தன்மை நீங்கும். ரோஜா குல்கந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் ரோஜா குல்கந்தை எடுத்துக்கொள்ளலாம். பித்தத்தை சமநிலைப்படுத்தும். பித்தம் அதிகரிக்கும்போது, தலைவலி, சோம்பல், சோர்வு ஏற்படும். இவையனைத்தையும் ரோஜா குல்கந்து சரிசெய்யும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் வலி ஆகியவற்றை சரிசெய்யும். குறிப்பாக பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது அருமருந்து. அந்தபிரச்னைகளை சரிசெய்யும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை சாப்பிடும்போது, மலச்சிக்கல் பிரச்னைகள் சரியாகும்.

வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை சீர் செய்யக்கூடிய சக்தி அதிகம். மேலும் பசியை தூண்டும்.

சுத்தமான வெற்றிலையை காம்பு கிள்ளி எடுத்து, உணவுக்குப்பின் எப்போதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இதை சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும், எலும்புகளுக்கு உறுதி கிடைக்கும். மூட்டு வலி இருக்காது. எலும்பு தேய்மானம் இருக்காது. எலும்பு மஞ்ஜைகளுக்கு வலு கிடைக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும், ரத்ததை சுத்திகரிக்கும். வாய்துர்நாற்றத்தை போக்கும். அனைவரும் சாப்பிடலாம்.

வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட பிடிக்கவில்லையென்றால், ரோஜா குல்கந்தை நீங்கள் சுடுதண்ணீரில் சேர்த்து பருகலாம். இது உடல் சோர்வை நீக்கும், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணை சரிசெய்யும். சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, வாத நோய், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், அஜீரண கோளாறு என அனைத்தையும் சரிசெய்யும். உடலில் கால்சிய சத்து அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.