Betel leaf: குழந்தையின்மை பிரச்சினை இதயத்துடிப்பில் மாறுபாடு.. பாக்கில் இவ்வளவு அபாயமா? - எச்சரிக்கை மக்களே!
நம் கணையத்திற்கு சென்று அமைலேஷ், லைப்பேஸ் போன்ற ஜீரண என்சைம்களை தூண்டுவதாக சொல்லப்படுகிறது. வயிற்றில் இருக்கும் தசைகளையும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் என்று கூறப்படுகிறது.
உண்மையைச் சொல்லவென்றால், யாருமே வெறும் வெற்றிலையை சாப்பிடுவது கிடையாது. அதனுடன் சுண்ணாம்பு பாக்கு உள்ளிட்ட பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெற்றிலை ஜீரணத்திற்கு உதவும் என்று அழுத்தமாக சொல்வதற்கு மனிதர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் முடிவுகள் எதுவும் இல்லை.
ஆனால் எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் இருக்கின்றன. வெற்றிலையை நாம் சாப்பிடும் போது, அது நம் கணையத்தில் உள்ள
நம் கணையத்திற்கு சென்று அமைலேஷ், லைப்பேஸ் போன்ற ஜீரண என்சைம்களை தூண்டுவதாக சொல்லப்படுகிறது. வயிற்றில் இருக்கும் தசைகளையும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் என்று கூறப்படுகிறது.
வெற்றிலையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பொருள் யோஜினால்; இது வலி நிவாரணியாக செயல்படுகிறது. வெற்றிலைக்கு காரத்தன்மையை கொடுப்பது இதுதான். அதேபோல வெற்றிலையில் இருக்கும் சாவி பீட்டால். காவிக்கால், உள்ளிட்டவை வெற்றிலைக்கு காரத்தன்மையை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல வாசனையையும் கொடுக்கிறது. வெற்றிலைக்கு வாயில் இருக்கக்கூடிய கிருமிகளை போக்கும் வல்லமையும் இருப்பதாக கூறப்படுகிறது.இது மட்டுமல்லாமல் சோம்பு சீரகத்தில் உள்ள அனடோல் வெற்றிலையில் இருக்கிறது.
இவையெல்லாம் வெற்றிலை பற்றிய பாசிட்டிவான விஷயங்கள் எங்கே பிரச்சனை வருகிறது என்றால், வெற்றிலையை நீங்கள் பாக்கோடு எடுக்கும் பொழுதுதான்.
எப்படி நாம் புகைப்பிடிக்கும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் நிக்கோட்டின் நம்மை அடிமைப்படுத்துகிறதோ, அதேபோல பாக்கில் உள்ள அரிகோலின் அடிமைத்தன்மையை உருவாக்குகிறது. அதனால்தான் பாக்கு போடுகிறவர்கள் தொடர்ந்து பாக்கு போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
பாக்கில் இருக்கக்கூடிய அரிகோலின் நமக்கு கேன்சரை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக வாய், தொண்டை, உணவுக் குழாய், வயிறு உள்ளிட்டவற்றில் புற்றுநோயை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவற்றுடன் சுண்ணாம்பு சேரும்பொழுது, அவை மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
அதேபோல குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, அந்தப் பிரச்சனையானது அவர்களுக்கு மேலும் அதிகரிக்கும். பாக்கு நம்முடைய இதய துடிப்பை மாற்றுவதற்கான வேலையையும் செய்கிறது.
இது மட்டுமில்லாமல் சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், கொலஸ்ட்ராலை மாறு படுத்தக்கூடிய தன்மையும், இந்த பாக்கில் இருக்கிறது. ஆகையால் கவனம் மக்களே!
நன்றி மருத்துவர் : அருண்குமார்
டாபிக்ஸ்