இந்த பண்டிகையில் ரூ.10,000-ல் ஆண்ட்ராய்டு போன்கள் வாங்க சிறந்த பரிந்துரைகள்.. iQOO Z9 Lite 5G, Infinix Hot 50 5G..
இந்த பண்டிகையில் ரூ.10,000-ல் ஆண்ட்ராய்டு போன்கள் வாங்க சிறந்த பரிந்துரைகள்.. iQOO Z9 Lite 5G, Infinix Hot 50 5G.. மற்றும் சிலவற்றைக் காண்போம்.

ரூ.10,000-க்கு அருகில் மொபைலை வாங்க ஏராளமான விருப்பங்கள் நம் பார்வைக்கு வந்துள்ளன. அதில் உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரியான ஆண்ட்ராய்டு போனை தேர்வை செய்வது கடினமான பணியாகும். அந்த சிக்கலைத் தீர்க்க உதவும் வகையில், iQOO, Redmi மற்றும் Infinix போன்ற செல்போன் நிறுவனங்கள், இந்த விலை வரம்பில் நடுத்தரக் குடும்ப உறுப்பினர்கள் வாங்கக்கூடிய சிறந்த அலைபேசிகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் பட்டியலைப் பாருங்கள்.
அக்டோபர் 2024 இல் ரூ .10,000 க்கு கீழ் வாங்க சிறந்த போன்கள்:
1) iQOO Z9 Lite 5G:
iQOO Z9 Lite, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 840 nits உச்ச பிரகாசத்துடன் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 6nm செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட MediaTek Dimensity 6300 சிப்செட் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகளைக் கையாள Mali G57 MC2 GPU ஆகியவற்றில் இயங்குகிறது. இது 6 GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை eMMC 5.1 சேமிப்பினைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை செல்போனின் சேமிப்பகத்தை விரிவாக்க முடியும்.