Fruits in Dinner: உங்கள் இரவை இனிமையாக்க எந்தெந்த பழங்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?-best fruits for a better nights sleep - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fruits In Dinner: உங்கள் இரவை இனிமையாக்க எந்தெந்த பழங்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Fruits in Dinner: உங்கள் இரவை இனிமையாக்க எந்தெந்த பழங்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Aug 21, 2024 08:17 PM IST

Fruits in Dinner: பொதுவாக பழங்கள் சாப்பிடுவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிடக் கூடிய சில பழங்களும் உண்டு. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்.

Fruits in Dinner: உங்கள் இரவை இனிமையாக்க எந்தெந்த பழங்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?
Fruits in Dinner: உங்கள் இரவை இனிமையாக்க எந்தெந்த பழங்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?

சிலர் எடை இழப்பு பயணத்தின் ஒரு பகுதியாக பலர் பழங்கள் மற்றும் சாலட்களை சாப்பிட்டு தூங்குகிறார்கள். ஆனால் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் புரதம், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். இது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

இரவு உணவில் பழம் சாப்பிடுவது நல்லதா?

இரவு உணவிற்கு பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையாது. உடல் எடையை குறைக்க, சீரான உணவுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். கொழுப்பு இல்லாத உணவையும் உண்ணுங்கள். இரவு உணவிற்கு லேசான உணவு நல்லது, ஆனால் புரதம் இல்லாத உணவு இல்லை. இரவு உணவில் புலாவ், கிச்சிடி, பருப்பு சாதம், காலை உணவு போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இவற்றில் புரதம் உள்ளது. முழு ஆரோக்கியமுள்ளவர்கள் இரவு உணவிற்கு பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்ல நடைமுறை அல்ல.

இரவு நேரங்களில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்

கோதுமை, அல்லது அரிசி மற்றும் தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். உணவியல் நிபுணர்கள் பொதுவாக பழங்களை காலை உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவற்றை முக்கிய உணவாக உண்ணச் சொல்லவில்லை. இரவில் படுக்கும் முன் சில பழங்களை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்கலாம்.  இரவு நேரங்களில் சாப்பிடக் கூடிய சில பழங்களும் உண்டு. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்.

அன்னாசி பழம்

அன்னாசிப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, இரவு தூங்கும் முன் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கிறது. இது தூக்கத்தை தூண்டுகிறது. இரவு உணவிற்குப் பிறகு அன்னாசிப்பழத்தை 3 துண்டுகளாக நறுக்கி சாப்பிடுவது உங்களது இரவை இனிமையாக்கி நன்றாக தூக்கம் வர உதவும்.

வாழைப்பழம்

எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. வழக்கமாக காலை உணவுடன் சாப்பிடப்படும் இந்தப் பழங்களை, இரவிலும் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இதிலுள்ள மெக்னீசியம் நம் தசைகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரவில் படுக்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல உறக்கம் வர வழிவகுக்கிறது

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, நார்சத்து உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. மேலும், சீரான துக்கத்தை பெறவும், தூக்கத்தின் நேரத்தையும் அதிகரிக்கவும் இது உதவுகிறது

தக்காளி

தக்காளியில் லைகோபீன் என்ற கலவை உள்ளது. இந்த கனிமம் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.