தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Best Beauty Tips For Women

Beauty Tips: இளம்பெண்களுக்கு பயனுள்ள சிறந்த அழகுக்குறிப்புகள்!

I Jayachandran HT Tamil
May 18, 2023 10:45 PM IST

இளம்பெண்களுக்கு பயனுள்ள சிறந்த அழகுக்குறிப்புகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

இளம்பெண்களுக்கு பயனுள்ள சிறந்த அழகுக்குறிப்புகள்
இளம்பெண்களுக்கு பயனுள்ள சிறந்த அழகுக்குறிப்புகள்

ட்ரெண்டிங் செய்திகள்

முகம் முழுவதும் நன்றாக பிளெண்ட் செய்யப்பட்ட லைட் வெயிட் ஃபவுண்டேஷனை இடவும்.

கன்னங்களில் நியூட்ரல் பிங்க் காம்பேக்ட்டை கன்னத்தின் எலும்புகளில் இருந்து கண்ணின் வெளிப்புறம் வரை ஆங்கில சி வடிவில் இடவும். இந்த மேக்கப்புக்கு ஆழமும் நேர்த்தியும் கூட்ட கன்ன எலும்புகளுக்குக் கீழே இன்னும் அடர்த்தியான நிறத்தை பூசவும்.

ஐபுரோ பிரஷ் மூலம் புருவங்களைத் திருத்தி நேராக்கவும்.

உங்கள் கண்ணின் மேல் இமைகள் முழுவதும் உங்களுக்குப் பிடித்த ஒரு கலரை சமமாகப் பூசவும். மஸ்காராவைச் சேர்க்கவும்.

உதட்டில் ஐஸ் பிங்க் நிற லிப்ஸ்டிக் இடவும். ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் இட்டு, சமப்படுத்தவும்.

உங்கள் கூந்தலை ஸ்டைலாக பின்னிக் கொள்ளலாம் அல்லது லூஸாகவும் விடலாம். ஹெர்ரிங்போன் பின்னல் இட்டுக் கொள்ள விரும்பினால், கூந்தலை இரண்டு பாதியாகப் பிரித்துக் கொள்ளவும். இரண்டிலிருந்தும் நுனிகளை பின்னிக் கொண்டே வந்து, இடையில் கிராஸ் செய்வது போல பின்னவும்.

சிவந்த அல்லது பிங்க் நிறத்தில் உதடுகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நேரம் தவிர, ஒட்டுமொத்த மேக்-கப் சீரானதாகவே இருக்க வேண்டும். கண்கள் அல்லது உதடுகளுக்கு மேக்-கப் செய்வதன் மூலம் உங்களுடைய மேக்-கப் பயத்தை முதலில் போக்கி கொள்ளுங்கள்.

குறைந்த மஸ்காராவுடன் இயல்பான கண்கள் மற்றும் அடர்சிவப்பு நிற உதடுகள் அல்லது ஸ்மோக்கி மேக்-கப் கண்கள், லேசான சிவப்பு நிற உதடுகள் போன்றவற்றை முயற்சிக்கலாம். தொடர்புடைய கலர்களாக பயன்படுத்துவது அவசியம், ஆனால் அதற்காக நீல நிற ஆடைக்கு நீங்கள் கண்டிப்பாக நீல நிற ஐ-ஷேடோவைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.

உங்களுக்கு பிரியமான எல்லா கூந்தல் அலங்கார, மேக்கப் பொருள்களையும், திருமணத்துக்கு அணிய இருக்கும் ஆடைகளையும் ஒன்றாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நகை, ஆடைகள் போன்ற பொதுவான விஷயங்களைக் கவனியுங்கள், மேக்கப்பில் வார்ம் டோன் அல்லது கூல் டோன் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யுங்கள். லிப்ஸ்டிக்கில் பல கலர்களை வைத்திருக்க வேண்டும். கருப்பு/பழுப்பு/தங்க நிற ஐஷாடோக்களில் சிலவற்றை வைத்திருங்கள். ஒன்றிரண்டு பிளஷர்கள், ஐலைனர்களையும் வைத்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எளிதாக பேக்கிங் செய்ய லிப் பேலட்கள், ஐஷாடோ பேலட்கள், பிளஷர் பேலட்கள் உதவும்.

ஒரு நல்ல ஐலைனர் என்பது கலைந்துபோகவோ, பரவி விடவோ கூடாது. பெரும்பாலான லிக்விட் ஐலைனர்கள் சில மணி நேரங்களுக்கு பின்னர் ஸ்மட்ஜ் ஆகிவிடும். பென்சில் ஐலைனர்களும் எளிதாக கலைந்துவிடும். ஜெல் சார்ந்த அல்லது ஆயில் சார்ந்த ஐ லைனர்களை தேர்ந்தெடுங்கள். அவை நீண்ட நேரம் இருக்கும் திறன் வாய்ந்தவை.

WhatsApp channel

டாபிக்ஸ்