யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்க!

யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Published May 13, 2025 06:00 AM IST

யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டுமே யோகா செய்வதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்று பாருங்கள்.

யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்க!
யோகாவின் நன்மைகள் : தினமும் வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்க!

முதுகெலும்பு மற்றும் தசைகள் வலுவாகும்

நீங்கள் தினமும் 20 நிமிடங்கள் மட்டும் யோகாவை பழகினால் போதும், அது உங்கள் முதுகெலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும். உங்கள் உடலின் போஸ்சர்களை மேம்படுத்த உதவும். ட்ரீ போஸ், கீழே குனிந்து நாய்போல் பார்ப்பது போன்ற யோகாக்கள் உங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தும். இது நீங்கள் நேராக நீண்ட காலம் நிற்கவும், நடக்கவும் உதவும்.

பேலன்ஸ்

நீங்கள் தினமும் வெறும் 20 நிமிடம் மட்டுமே யோகா செய்வதால், உங்கள் ஒட்டுமொத்த உடலையும் நல்ல முறையில் பேலன்ஸ் செய்ய உதவும். இந்த பேலன்ஸ் மேம்படுவது உங்கள் ஒட்டுமொத்த திறனையும் அதிகரிக்க உதவும். மற்ற உடற்பயிற்சிகளான நடை, ஓட்டம், நீச்சல் ஆகிய பயிற்சிகளை நீங்கள் சிறப்பாக செய்ய உதவும்.

மனஅழுத்தம் மற்றும் பயத்தைப் போக்கும்

யோகா மனஅழுத்தத்தைப் போக்கும் மற்றும் பதற்றத்தை குறைக்கும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் யோகாவை தினமும் செய்யும்போது, அது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைத்து உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. உங்களின் நரம்பு மண்டலத்தை அமைதியாக்குகிறது. அவற்றுக்கு ஓய்வு கொடுக்கிறது. யோகா உங்களுக்கு உங்கள் மூச்சுப்பயிற்சியில் கவனம்செலுத்த உதவுகிறது. உங்கள் மூச்சை நீங்கள் எப்படி பயன்படுத்தி, உங்களின் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த வேண்டும் என்று பாருங்கள்.

நல்ல உறக்கம்

நீங்கள் யோகா பழகும்போது, அது உங்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். அது உங்கள் உறக்கத்தை முறைகளையும் மாற்றும். மெலோட்டனின் எனப்படும் உறக்க ஹார்மோன்களை யோகா அதிகம் சுரக்கச் செய்யும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்கள் உறக்க சுழற்சியை முறைப்படுத்தும்.

நெகிழ்தன்மையை அதிகரிக்கும்

தினமும் நீங்கள் யோகா செய்வதால் குறிப்பிடும்படியான நம்பிக்கைகளுள் ஒன்று, நாட்கள் செல்லச்செல்ல அது உங்கள் உடலின் நெகிழ் தன்மையை அதிகரிக்கிறது. யோகாவில் உள்ள அசைவுகள் மற்றும் நெகிழ்வுகள் உங்கள் தசைகளை வலுப்படுத்துகின்றன. தினமும் யோகாவை நீங்கள் பழகுவதால், அது உங்களின் இயங்கும் திறனை அதிகரிக்கும். உங்கள் உடலின் நெகிழ்தன்மை அதிகரிக்கும்.

உடலில் கார்டிசால் என்ற ஹார்மோனைக் குறைக்கும்

கார்டிசால் என்பது மனஅழுத்தத்தைக் கொண்டுவரும் ஹார்மோன் ஆகும். அது உங்கள் உடலில் அதிகம் சுரந்தால், எண்ணற்ற ஆரோக்கிய குறைபாடுகளைக் கொண்டுவரும். அதில் மனஅழுத்தம், பயம், பதற்றம், உடல் எடை குறைப்பு என அனைத்தும் அடங்கும். யோகவால் கார்டிசாலின் அளவு குறிப்பிடும்படியாக குறையும். அது உங்கள் மனதை பதற்றமின்றி வைக்கும்.

உடல் வளர்சிதையை ஊக்கப்படுத்தும்

சில யோக நிலைகள், குறிப்பாக சூரிய நமஸ்காரம் உங்கள் இதயத் துடிப்பையும், உடல் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும் தன்மைகொண்டது. இது உங்கள் உடல் எடையை இழக்க உதவும். இந்த அதிகமான வளர்சிதை மாற்றம், உங்கள் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்கும். உடல் கொழுப்பையும் குறைக்கும்.

ஆரோக்கியமான செரிமானத்தை அதிகரிக்கும்

யோகா உங்கள் உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உங்கள் உடலின் செரிமான உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். செரிமான எண்சைம்கள் வெளியாவதையும் அதிகரிக்கும்.

குடல் – மூளை தொடர்புக்கு உதவும்

மூளை மற்றும் செரிமான மண்டலத்துக்கும் உள்ள தொடர்புக்கு யோகா உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியை அதிகரிக்க யோகா உதவுகிறது. இது உங்கள் உடலின் குடல் மற்றும் மூளையும் இடையே நடக்கும் உரையாடலை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

யோகா, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இது உங்கள் பொதுவான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது. உங்களக்கு பக்கவாதம் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் காக்கிறது.