Benefits Of Watermelon : கோடையின் நண்பன் மட்டுமல்ல உடலுக்கு எத்தனை நன்மைகளை கொடுக்கிறது பாருங்க தர்ப்பூசணி?
Benefits of Water Melon : தர்ப்பூசணியின் விதைகளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உலர்த்தி உட்கொள்ளலாம். அதன் தோலிலும் சாம்பார், அல்வா என உணவுப்பொருட்களை செய்து சாப்பிடலாம்.

ஒரு கப் தர்ப்பூசணியில் 45.6 கலோரிகள் உள்ளது. 0.2 கிராம் கொழுப்பு, 1.52 மில்லி கிராம் சோடியம், 11.5 கிராம் கார்போஹைட்ரேட், 0.6 கிராம் ஃபைபர், 12.3 மில்லிகிராம் வைட்டமின் சி, 170 மில்லிகிராம் பொட்டாசியம், 10 மில்லிகிராம் கால்சியம், வைட்டமின் ஏ 865 மைக்ரோகிராம், லைக்கோபெனே 6,890 மைக்ரோகிராம் உள்ளது.
தர்ப்பூசணிப்பழத்தை தினமும் இரண்டு கப் எடுத்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய பழங்களுள் ஒன்றான தர்ப்பூசணி உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் வைட்டமின் சியில் 15 சதவீதத்தை ஒரு கப் தர்ப்பூசணி கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி6, பொட்டாசியம் ஆகிய வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி உடல் இரும்பு உறிஞ்சவும், நோய் எதிர்ப்பைக் கொடுக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து கண் மற்றும் சருமத்துக்கு மிகவும் முக்கியமானது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நரம்பு இயங்க உதவுகிறது.
வைட்டமின் பி6 உடல் புரதச்சத்துக்களை உடைக்க உதவி, நரம்பு மண்டல இயக்கத்துக்கு துணைபுரிந்து, நோய் எதிர்ப்புக்கு வழிகோலுகிறது.
இயற்கை லைக்கோபெனே கிடைக்க வழிவகுக்கிறது
தர்ப்பூசணியில் உள்ள லைக்கோபெனேவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதுதான் தர்ப்பூசணிக்கு அதன் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
இது இதயகோளாறு, கண் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் ஆபத்துக்களை குறைக்கும் தன்மைகொண்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
நீர்ச்சத்தை கொடுக்கிறது
90 சதவீதம் தண்ணீரால் ஆனது என்பது பெயரிலேயே தெரிவதால், இது உங்கள் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் காக்கிறது. நாம் குடிக்கும் தண்ணீரின் அளவில் இருந்துதான் நமது உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது.
தர்ப்பூசணியின் சிறிது உப்பு தூவி உடற்பயிற்சிக்கு பின் எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடல் பயிற்சியின்போது வெளியேற்றிய வியர்வைக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்துவிடும்.
செரிமானத்தை அதிகரிக்கிறது
இதில் உள்ள தண்ணீர் சத்து மற்றும் நார்ச்சத்துக்கள், உங்கள் செரிமானத்துக்கு உதவுகறிது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலக்கி வெளியேற்ற உதவுகிறது. உங்கள் செரிமான மண்டலத்தில் இருந்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
தர்ப்பூசணி சாப்பிட்ட பின் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், இது உங்களுக்கு தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவதை தடுத்து எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
லைக்கோபெனே அதிகம் நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தை காக்கும் என்று ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ரத்த அழுத்ததை குறைத்து, இந்த பழத்தில் உள்ள எல் சிட்டூருலைன் மற்றும் எல் அர்ஜினைன் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தமனிகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது.
புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது
தர்ப்பூசணியில் உள்ள லைக்கோபெனே, வீக்கத்தை குறைக்கிறது, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. ஃபீரி ராடிக்கல்கள் மற்றும் அவற்றை எதிர்க்கும் தன்மை இரண்டுக்கும் இடையே ஏற்படும் சமமின்மையை போக்குகிறது. நீண்டகால வீக்கம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மைகொண்டது.
வீக்கத்தை குறைத்து புற்றுநோயை செல்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் லைக்கோபெனேவுக்கு உள்ளது. இதனால், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அதிகளவு லைக்கோபெனே எடுத்தால் உங்கள் உடலில் புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
வீக்கத்தை குறைக்கும் தன்மை
லைக்கோபெனே மற்றும் வைட்டமின் சி ஆகியவை, வீக்கத்தை குறைக்கிறது. வலி, வீக்கம், சரும கோளாறுகளை போக்குகிறது. புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய்கள், நீரிழிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் நீண்டகால வீக்கத்தை குறைக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தர்ப்பூசணியில் உள்ள வைட்டமின் சி, பி6 மற்றும் ஏ ஆகியவை உங்கள் சருமத்தை மிருதுவாக்குகிறது. வைட்டமின் சி கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்தன்மை மற்றும் சருமத்துக்காக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறத. சரும செல்களை சரிசெய்ய வைட்டமின் ஏ உதவுகிறது. சரும வறட்சி, தடிப்பு, வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்த வைட்டமின் பி6 உதவுகிறது.
தசை வலியை போக்குகிறது
தசைவலியைபோக்குகிறது. தசை சேதத்தை தடுக்கிறது.
தர்ப்பூசணியின் விதைகளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உலர்த்தி உட்கொள்ளலாம். அதன் தோலிலும் சாம்பார், அல்வா என உணவுப்பொருட்களை செய்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்