தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Walking : வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் என்னவாகும்? முயற்சித்து பாருங்களேன்!

Benefits of Walking : வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் என்னவாகும்? முயற்சித்து பாருங்களேன்!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2024 01:00 PM IST

Benefits of Walking : வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் என்னவாகும் என்று முயற்சித்துதான் பாருங்களேன்.

Benefits of Walking : வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் என்னவாகும்? முயற்சித்து பாருங்களேன்!
Benefits of Walking : வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் என்னவாகும்? முயற்சித்து பாருங்களேன்!

வெறும் காலுடன் புல் தரையில் தினமும் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் தரையில் புல்வெளியில் நடப்பதை எர்த்திங் அல்லது கிரவுண்டிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது நாம் குழந்தை பருவங்களில் விளையாடிய விளையாட்டுகளுள் அல்லது செய்த செயல்களுள் ஒன்றாகும். இதனால் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை அறிவியல் கண்டுபிடித்துள்ளது. நாம் வெறுங்காலுடன் தரையில் நடப்பதால், நமது உடலுக்கு இயற்கையாக ஆற்றலும், குணமாகும் திறனும் அதிகரிப்பதாக அறிவியல் கூறுகிறது. வெறும் காலுடன் புல் தரையில் தினமும் 10 நிமிடங்கள் நடப்பதால் என்னவாகிறது என்று பாருங்கள்.

மூளைக்கு நேர்மறையான மாற்றத்தைக் கொடுக்கிறது

புல் தரையில் வெறும் காலுடன் நடப்பது, மனஅழுத்தம் மற்றம் பதற்றத்தை போக்குகிறது. இதுகுறித்த ஆய்வு ஒன்று, மண்தரையில் வெறும் காலில் நடப்பது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உடலில் கார்டிசால் அளவைக்குறைக்கிறது. கார்டிசால் என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன். புல்தரையின் குளிர்ச்சி, மிருதுவான புற்கள் காலுக்கு இதத்தை தருகின்றன. மனஅழுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்துகின்றன. இது நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளைத்தரும். அங்குதான் பசுமை வெளிகள் குறைவாக இருப்பதுடன், மனஅழுத்தமும் அதிகம் உள்ளது.

உடலின் சிர்கார்டியன் ரிதத்தை முறைப்படுத்துகிறது

சிர்காரிடியன் ரிதம் என்பது உறக்கப்பழக்கம். சரியாக இரவு நேரத்தில் உறங்கி, காலையில் விழிப்பதை குறிக்கும். வெறும் காலுடன், புல்வெளியில் நடப்பதால், உறக்கத்தின் தரம் அதிகரிக்கும். இதுகுறித்த ஆய்வும், இது உடலில் கார்டிசால் அளவைக் கட்டுப்படுத்தி, இரவில் படுத்தவுடன் உறக்கத்தை வரவழைத்து, ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் நன்றாக உறங்க முடிகிறது. மண்ணுடன் நாம் நெருக்கமாக இருக்கும்போது, உறக்கமின்மை வியாதியே குணமடைகிறது. உறக்க முறையும் சீராகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

வெற்றுக்காலுடன் புல்தரையில் நடக்கும்போது, உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. கலிஃபோரினியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், இது வீக்கத்தை குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது என்று தெரியவந்துள்ளது. மண்ணின் இயற்கை வளத்துடன் நாம் இருக்கும்போது, அது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் மற்றும் வீக்கத்தைப் போக்கும் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்துகிறது. இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். உடலில் அடிக்கடி நோய் தொற்று ஏற்படாமல் விரட்டியடிக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

இயற்கை வலி நிவாரணி

நாள்பட்ட வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வெறுங்காலுடன் புல் தரையில் நடப்பது நல்ல நிவாரணத்தைத்தரும். மேலும் உடலில் வலி மற்றும் வீக்கத்தை போக்குகிறது. மண்ணில் உள்ள எலக்ட்ரான்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு, வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஆபத்துக்களை விளைவிக்கும் ஃப்ரிராடிக்கல்களை முறைப்படுத்தும். இந்த சாதாரண பழக்கம் உங்கள் வலி மேலாண்மை பயணத்தில் மாத்திரைகளை குறைக்க உதவும்.

இதயத்துக்கு இதமானது

வெறுங்காலுடன் புல் தரையில் நடப்பது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதயத்துடிப்பை மாற்றத்தை முறைப்படுத்தி, இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வெறுங்காலுடன் புல் தரையில் நடப்பது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது. பூமியின் இயற்கை ஆற்றல் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம், இதயத்துக்கு நன்மையளிக்கிறது. ஏனெனில் இதயத்தின் இயக்கத்துக்கு வலுவான நரம்பு மண்டலம் தேவை.

சரியான முறையில் நடக்க உதவுகிறது

வெறுங்காலுடன் புல் தரையில் நடப்பது, நன்றாக நடக்க உதவுகிறது. சமமில்லாத மண் தரையில் நடப்பதால், கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, நடக்கும்போது நாம் தடுமாறாமல் நேராகவும், சரியாகவும் நடக்க உதவுகிறது. தரையில் நன்றாக காலை ஊன்றி நடக்க வைக்கிறது. கால் மற்றும் பாதத்தில் உள்ள சிறிய சதைகளையும் வலுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது நாம் நடக்கும்போது தடுமாறாமல் சரியாக நின்று விழுந்துவிடாமல் நடக்க உதவுகிறது. குறிப்பாக இது வயதானவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது.

புல்தரையில் பாதுகாப்பாக நடப்பது எப்படி?

புல்தரையில் வெறுங்காலுடன் நடப்பது எண்ணற்ற நன்மைகளைத் தருவதுதான் என்றாலும், நீங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

புல்தரையில் கண்ணாடி போன்ற கூர்மையான பொருட்கள், மலைகள் அல்லது காலுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இடமாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பூச்சிக்கொல்லி மருந்தகள் தெளிக்கப்படாத புல்வெளிகளாக இருக்கவேண்டும். அந்த மண்ணில்தான் இயற்கை நுண்ணுயிர்கள் இருக்கும். இவற்றால் நமது உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்பட்டுவிடும்.

சிலருக்கு புல்வெளியில் நடப்பது ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அதுபோன்ற அலர்ஜி உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடக்கவேண்டும். அவர்கள் புல்வெளிகளை தவிர்த்து, மண்தரையில் நடக்கலாம்.

வெறும்காலில் நடந்து பழக்கம் இல்லாதவர்கள், முதலில் துவங்கும்போது, சிறிது தூரம் மட்டுமே நடக்கவேண்டும். நாட்கள் செல்ல செல்ல தூரத்தை அதிகரிக்கலாம். அப்போதுதான் காலில் வலிகள் ஏற்படாது.

காலில் ஏதேனும் புண்கள் அல்லது வெடிப்புகள் ஏற்படுகிறதா என்றும் கவனித்துக்கொள்ளவேண்டும். அதுதான் தொற்றுக்களை நீக்கி, கால்களை சுத்தப்படுத்தும்.

ஈரமான புல்வெளியில் நடப்பதை தவிர்க்கவும், அது காலில் வெடிப்பு அல்லது சேற்றுப்புண்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.