Benefits of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!

Benefits of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 19, 2024 07:00 AM IST

Benefits of Walking : சாப்பிட்டவுடன் 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!
Benefits of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!

எப்படி நடக்க வேண்டும்?

நீங்கள் சாப்பிட்டவுடன், வேகமாக நடக்கக்கூடாது. மெதுவாக நடந்து செல்லவேண்டும். சிறுசிறு அடிகளாக எடுத்துவைத்து நடக்கவேண்டும். உங்களை வற்புறுத்தி நடக்கக்கூடாது. அருகில் உள்ள பார்க்கில் ஒரு 10 நிமிடங்கள் நடந்துவிட்டு வரவேண்டும்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

சாப்பாட்டுக்குப்பின் சிறிது தூரம் நடப்பது, உங்களின் செரிமான மண்டலத்துக்கு நல்லது. நீங்கள் உண்ட உணவை நன்றாக உடைத்து, செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறிய நடை, இன்சுலின் சென்சிடிவிட்டியால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது

தினசரி கலோரிகளை பராமரிக்க அல்லது எடையை குறைக்க உதவுவதற்காக சாப்பாட்டுக்கு முன்னர், வழக்கமான நடை தேவை. இந்த உடற்பயிற்சி, கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது மற்றும் நல்ல மனநிலையை அதிகரிக்கிறது

உடற்பயிற்சி, எண்டோர்ஃபில்களை வெளியிடவும், மனஅழுத்ததைக் குறைத்து, மனநிலையை அதிகரிக்கிறது. இது மன ஆரோக்கியத்தை நன்றாக்கவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

வளர்சிதையை அதிகரிக்கிறது

உடலின் வளர்சிதையை அதிகரிக்க உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகளை குறைக்க உதவுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

வாயு தொடர்பான நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

நடைபயிற்சியால், வயிறில் உருவாகும் அமிலங்கள் குறைகிறது. இதனால் வாயு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

உறக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது

சாப்பிட்டு முடித்தவுடன், மிதமான உடற்பயிற்சிகள், உறக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலின் உறக்கம் – விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் மனஅழுத்ததை குறைக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

நடைப்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. இது மூட்டுகளில் இறுக்கம் மற்றும் வலிகளை தடுக்க உதவுகிறது. இது உங்களின் மூட்டுகளில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் ஒன்றாகும். இதனால் உங்கள் மூட்டுகளில் நெகிழ்தன்மையும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

சாப்பிட்டவுடன் ஏற்படும் சோர்வை போக்கி நடப்பது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் உங்களின் மனம் தெளிவடைகிறது. உங்களின் கவனத்தை அதிகரிக்கிறது. சோர்வு போன்ற உணர்வை குறைக்கிறது.

எப்படி நடக்க வேண்டும்?

ஒரு நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தவுடன், வேகமாக நடப்பதை தவிர்க்க வேண்டும். சிறு சிறு அடிகளாக எடுத்து வைத்து நடக்கவேண்டும். நீண்ட நேரம் அல்ல சிறிது நேரம் நடந்தால் போதும்.

இதை உங்கள் அன்றாட பழக்கமாக்குங்கள்

உங்கள் ஒவ்வொரு உணவுக்குப்பின்னரும், 10 நிமிடம் நடந்தால் போதும். அது சிறிய மற்றும் ஒரு நல்ல வழியாகும். அது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த சிறிய பழக்கம், உங்கள் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். செரிமானத்தை அதிகரிக்கும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.